பக்கம்:ஆண்டாள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

87


பகுதிகள் உள்ளன. பாயிரமே ஒரு நூலிற்கு உயிர்நிலை. அது நூற்பொருளைத் தெளித்துக் காட்டற்கு ஒர் ஆடி என்னலாம். இந்நூலில் முதல் ஐந்து பாசுரங்களும் பாயிரம். இது முதற்பகுதி. செல்வம். செயல், குணங்களில் பத்துவகைப் பட்ட ஆயர்பாடிப் பெண்களை அஞ்ஞானத் துயிலிலிருந்து ஞான விழிப்பிற்குக் கொணர்வது இரண்டாம் பகுதி. அம்மகளிரை இறை கைங்கரியத்திற்குத் தகுதியுடையவராகச் செய்வது மூன்றாம் பகுதி. இப்பகுதி ஆழ்வார்கள் பதின்மருக்கும் ஊக்கமூட்டித் திருமாலின் அருளைக் குறிக்கிற தென்றும் அறிஞர் பகர்கின்றனர்" என்பது நோக்கத்தக்கது.

(பெரியாழ்வார் கெண்கொடி : பக். 96, 97, 98).

ஒரு பெரிய காட்சியினை - தோற்றத்தினை - ஒரு சிறிய கண்ணாடி காட்டிவிடுவதைப் போலத் திருப்பாவையின் முதற் பாட்டே பலபல உண்மைகளை உணர்த்தி நிற்கின்றது. காலங் கடந்தும் வாழும் இறவாக் கவிதைகள் என்று திருப்பாவை முழுவதையுமே அழைக்கலாம் என்றாலும் இம்முதற்பாடல் சாவாமூவாக் கவிதை எனச் சாற்றி விடலாம்.

அம்முதற்பாடலை நோக்குவோம் :

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்; போதுமினோ நேர்இழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏர்ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

-திருப்பாவை : 1

தமிழ்க்குடிபின் பழமையினையும் பெருமையினையும் ஒருங்கே புலப்படுத்தும் வகையில் சேர இளவல் ஐயனாரிதனார் தம் புறப்பொருள் வெண்பாமாலையில் 'குடிநிலை' என்ற பகுதியில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/89&oldid=1156628" இலிருந்து மீள்விக்கப்பட்டது