பக்கம்:ஆண்டாள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஆண்டாள்


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே-வாளொடு
முன்தோன்றி மூத்த குடி

- புறப்பொருள் வெண்பாமாலை. குடிநிலை

என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தினையே இன்னும் எளிதாகவும் எழிலாகவும் எவர் மனத்திலும் பதியும் வகையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் முகில்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த
தமிழோடு பிறந்தோம்

-பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி

என்று பெருமிதத்துடன் பகர்வர். முதற் காப்பியமாம் சிலம்பு தந்த சேர இளவல் இளங்கோவடிகள் 'குணவாயிற் கோட்டத்து அரசு துறந்து' இருந்தவரேயானாலும் அழகு துறந்து இராதவர். ஆகையினாலே தம் எழிலார் காப்பியத்தையே. "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்ற தொடங்குகின்றார். "காப்பியத்தை மங்கலச் சொல்லாற் தொடங்க வேண்டும் எனவே திங்கள் என்று தொடங்கினார், திங்கள் மங்கலச் சொல்லாதலின்' என்ற பழையவுரை காரரின் குறிப்பு ஈண்டு நோக்கத் தகுவதாகும். அம்முறையில் 'கண்ணபிரான் கீதையில் உகப்பாகப் பேசியிருக்கும் மாத மாகிய மார்கழியில் மங்கலச் சொல்லாம் திங்கள் அடுத்து அமையத் திருப்பாவையின் முதற்பாசுரம் தொடங்குகின்றது. 'மதிநிறைந்த நன்னாள்' எனப்படுவது முழுநிலா நாளினை -பெளர்ணமியினைக் குறிக்கும் 'எழுதரு மதியம் கடற்கண்டாங்கு' என்று குறுந்தொகை மதியின் மாட்சியினைப் புலம்படுத்தும்.

நீராடப் போதுவீர் போதுமினோ - பாவை நோன்பை முன்னிட்டு நீராட விருப்பமுள்ளவர்கள் வருவீர்களாக - என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/90&oldid=1462084" இருந்து மீள்விக்கப்பட்டது