பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்27



அற்புதமான வழியைக் கையாளுகிறான். எந்த விதத்திலும் சிறப்பு இல்லாதவனாகிய சுக்கிரீவனிடம் போவதற்கு வழி காட்டுகிறாள். சுக்கிரீவன் இரலை பர்வதத்தில் படைகள் ஒன்று மில்லாமல் இருக்கிறான். அப்படிப்பட்டவனிடத்தில் ஏன் செலுத்துகிறாள் என்றால், அவனை வைத்துக்கொண்டு போரிட்டால் அறத்தின் மூர்த்தி யினுடைய கொள்கை நிறைவேறும். வாலியைத் துணைக்கு அழைத்திருந்தால் அது பெருந் தவறாக முடிந்திருக்கும். ஆகவே diversional way என்று சொல்லு கிறோமே-வழிமாற்றி, சுக்கிரீவனிடம் போகுமாறு செய்கிறாள். ஆகையினாலே சபரி உதவி மாபெரும் உதவி என்பதை மறுப்பதற்கில்லை.

22. இலக்குவன் ஊர்மிளையிடம் சொல்லிக்கொண்டு காடு போனதாகக்கூடச் செய்தியில்லை. பரதன் தன் மனைவியின் உணர்ச்சியைச் சிறிதும் பார்க்காமல் 14 ஆண்டுகள் இந்திரியங்களை வென்று நந்தியம்பதியில் தங்கிவிடுகிறான். சத்துருக்கனனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவனுக்கு மனைவி ஒருத்தி இருந்ததாகக் கூடச் செய்தியில்லை. இராமனோ சீதையை நெருப்பில் இறங்கச் சொல்லத் தயங்கவில்லை. வாலி தாரை சொல்லை மதிக்கவில்லை, மண்டோதரி போன்ற உத்தமி இருந்தும், அவளுக்குத் தெரிந்தே சீதையைத் சிறை வைக்கிறான் இராவணன். பெண்ணுக்கும் பெண்மைக்கும் இராமாயணம் சிறப்புத் தரவில்லை என்பது மட்டுமன்றிக் கேவலப்படுத்தவும் தயங்கவில்லை. கவிச்சக்கர வர்த்திக்கு இது அடுக்குமா?

இந்த நாட்டினுடைய வரலாற்றைப் பார்ப்போமே யானால், வேதகாலம் முதற்கொண்டு பிற்காலம் வரையில் பெண்களுக்கு முழு மதிப்புத் தந்திருக்கிறார்கள் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/35&oldid=480977" இலிருந்து மீள்விக்கப்பட்டது