பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்11



ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்

என்பதிலே ஐம்பொறி என்பதனாலே எல்லாம் அடங்கிப் போகிறது.

காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும்

என்று மறுபடியும் ஏன் எடுத்துச் சொல்கிறார்? ஐம் பொறிகளையும் முதலில் பொதுவாகச் சொல்லிவிட்டு, அடுத்து கண் என்னும் பொறியைச் சிறப்புப்படுத்திச் சொல்கிறார். அதுபோல, அந்தப் பாடலில் ஆண், பெண் இருபாலாருக்குமாகச் சொல்லிவிட்டு, பெண்களுக்கென்று சிறப்பாக மூன்றாவது அடியைச் சொல்கிறார் என்று நினைப்பதிலே தவறு இல்லை.

10 'வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்

இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தைதிருச்செவிசாற்றுவாய்"

என்று ஆஞ்சநேயரிடம் சீதாபிராட்டி சொன்னது இராம பிரானுடைய பெருமையைக் குறைப்பதாகவோ அல்லது சீதையினுடைய பாத்திரப்படைப்பைக் குறைப்பதாகவோ இருக்கிறது என்று கருதலாம் அல்லவா?

இப்படி உங்களுக்குச் சந்தேகம் வரும் என்றுதான் கம்பன் அந்தப் பாட்டிலே ஒர் அற்புதமான சொல்லைச் சொல்லியிருக்கிறான்.

கணவன் மனைவியரிடத்தே இடைப்பிறவரலாக நடைபெறுகின்ற ஓர் உரையாடல். அதை வேறு யாரும் ஒட்டுக் கேட்டிருக்க முடியாது. ஆகவே, அதைச் சொல் வதன் மூலம் தான் உண்மையிலே, சீதைதான் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/19&oldid=954935" இலிருந்து மீள்விக்கப்பட்டது