பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 19

எனவே, விராதனுக்குப் பூனையை ஒப்பிட்டது சாலப் பொருந்தும். கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்தது போல’ என்பது ஒரு பழமொழி. இங்கே இராமன் விராத னாகிய பூனையின் கையிலிருந்து சீதையாகிய கிளியை மீட்டு விட்டான்.

பகலில் விண்மீன்:

இராமனுக்கும் விராதனுக்கும் கடும்போர் மூண்டது. விராதன் இராமன்மேல் மூவிலைவேலை எறிந்தானாம்.

திமுகத் திரிசிகைப்படை திரித்து எறியவே (25) தீ கக்கும் படையாம். திரிசிகை = மூன்று தலை. அதாவது, சூலம் மூன்று இலைவடிவாக இருக்கும். அந்த மூவிலை வேலாகிய சூலம் திரிசிகைப்படை எனப்பட்டது.

இராமன். குலத்தைத் தடுக்க அதன்மேல் வலிமையுள்ள ஓர் அம்பு எய்தான். உடனே, சூலம், இன்றோடு அரக்கர் குலம் அழிந்தது என்பதற்கு அறிகுறியாக, பகலிலேயே வானத்திலிருந்து விண்மீன்கள் விழுவதுபோல, இரண்டாகப் பிளக்கப்பட, திசைக்கு அப்பால் வெகுதொலைவில் போய் இருதுண்டங்களும் விழுந்தனவாம்:

"இற்றது இன்றொடு இவ் வரக்கர் குலம் என்று பகலே வெற்ற விண்ணிடை கின்று நெடுமீன் விழுவ போல் சுற்றமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே”

(27) நெடுமீன் = விண்மீன் எஃகம் = சூலம். கண்டம் = துண்டம். ஆசை = திசை. அந்தம் = இறுதி.

பகலில் விண்மீன்கள் விழுந்தால் தீய நிமித்தமாம். அரக்கர் குலம் அழிந்து போவதற்கு அறிகுறி இது என்று