பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆரணிய காண்ட ஆய்வு

"கில்லும் கில்லும் எனவந்து கிணமுண்ட நெடுவெண் பல்லும் வல்லெயிறும் மின்னு பகுவாய் முழைதிறந்து அல்லி புல்லும் மலர் அன்னம் அனையாளை ஒருகைச் சொல்லும் எல்லையின் முகந்து உயர் விசும்பு

தொடா”(19)

நிணம்= ஊன். நிணம் உண்ட நீண்ட வெண்பல் என்றது கோரப் பற்களை. அடுத்து வல் எயிறு என்றது மற்ற பற்களை பற்கள் மின்னுகின்றனவாம். பிளந்த வாயாகிய குகையைத் திறந்தபடி வந்தான்.

அல்லி புல்லும் மலர் அன்னம் அனையாள் சீதை. அல்லி=அக இதழ். அல்லி புல்லும் மலர் = இங்கேதாமரை. தாமரையில் அன்னம் இருக்கும்.

"அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய

தன்னுறு பெடையைத் தாமரை அடக்க” என்னும் மணிமேகலைப் பகுதி காண்க. அன்னம் அனைய வள் சீதை. தாமரையில் இருக்கும் திருமகளாகிய சீதை எனினும் ஆம். .

ஒரு திரை ஒவியத்தில் (சினிமாவில்), முரடன் ஒருவன் குதிரைமேல் இருந்தபடியே கீழே இருந்த கதைத்தலைவியை ஒரு கையால் பற்றித் தூக்கிக் கொண்டு சென்ற காட்சி நினைவிற்கு வருகிறது. இது அன்று தொட்டு இன்று வரை ஏன் என்றும் இருக்கும் போலும், வரலாறு மீண்டும் திரும்பும்

•rsisyth sGāgaol-u. History repeats itself assigib ஆங்கில மொழி என்றும் நிலைபேறு (சிரஞ்சீவித்துவம்) உடையது போலும், சீதைக்கே இந்த நிலை எனின், மற்ற பெண்களின் நிலைமை என்ன? அதுதான்-இது இன்றைக்கும் (1993) நடக்கிறது.

வாய்ப் பேச்சு வாயில் இருக்கும்போதே இது நடந்து விட்டது என்று கூறும் உலக வழக்காறு ஒன்று உண்டு.