பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ) ஆரணிய காண்ட ஆய்வு

பெறுவது மிகவும் உயர்ந்தது என, அதைவிட உயர்வு - அதைவிட இன்னும் உயர்வு என்ற பொருளில் அதின் உயர்வு என்ற பெயரை, (அதைக் காட்டிலும் உயர்வு என்னும் பொருளில்) கை முதிக நியாயம் என்னும் வடமொழிக்கு நேரான கோட்பாட்டுப் பெயராக யான் (க. ச.) சூட்டியுள்ளேன். அதாவது, கை முதிக நியாயம் என்பதைத் தமிழில் அதின் உயர்வுக் கோட்பாடு எனக் குறிக்கலாம்.

அசாமிளன் என்னும் கொடியவன், தன் மகனுக்குத் தான் இட்டிருக்கும் கடவுள் பெயரால் மகனை அடிக்கடி அழைத்ததன் பயனாக உயரிய நிலையடைந்தானாம். பிள்ளைகளுக்குக் கடவுள் பெயரை வைப்பதின் நோக்கமே இதுதான் எனப் பெரியவர்கள் கூறுவர். சரபங்கன் இராமன் பெயரைச் சொல்வதோடு நேரிலும் கண்ட பெருமைக்கு உரியவனானான்.