பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சடாயுகாண் படலம்

சடாயுவும் இராமன் முதலிய மூவரும் கண்டுகொள்ளும் படலமாதலின் இதற்கு இப்பெயர் நல்கப் பட்டது. சில சுவடிகளில் சடாயுப் படலம் என்று பெயர் உள்ளது. சடாயு கழுகு இனவேந்தன்: தயரதனின் நண்பன். எனவே, அவனுக்கும் இராமனுக்கும் ஏற்பட்ட பிணைப்பு இப் படலத்தில் இடம் பெற்றுள்ளது. . . . .

நட்பு மலைகள் -

இராமன் முதலிய மூவரும் காடு மலைகளையெல்லாம் கடந்து பஞ்சவடியை நோக்கிச் சென்றனர். மலைகள் ஒன்றோடொன்று தொடர்ந்து அமைந்துள்ளன. இம்மலைத் தொடர்ச்சி - நண்பர்களின் தொடர்புபோல் உள்ளதாம்.

"கிரிகள் கேண்மையின் தொடர்ந்தன" - (1) என்பது பாடல் பகுதி. கிரி= மலை; கேண்மை=நட்பு. கெடாமல் - பிரிக்க முடியாமல் - மேன் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் நட்பு எனப்படும். இதனை,

'கிறைநீர கீரவர் கேண்மை’ (782) 'கவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொலும்

பண்புடை யாளர் தொடர்பு” (783)

என்னும் குறள்களாலும், வெற்றி வேற்கையில் உள்ள

"ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருகிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே” என்னும் பாடல் பகுதியாலும் தெளியலாம். தொடர்மலைகள் அழியாதவை - நிலையானவை . மேன்மேலும் தொடர்ந்து