பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 163

(94) என ஈரல் தாமரையாக உருவகிக்கப் பட்டுள்ளது. இதில் ஒரு பொருத்தம் உள்ளது. அதாவது

உடலில், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு ஆதாரங்கள் உள்ளனவாகத் தத்துவ வாதிகள் கூறுவர்.

நீர் கழி உறுப்புக்கும் மலம் கழி உறுப்புக்கும் இடைப் பட்ட இடம்மூலாதாரம். இந்தஇடத்திற்கும் கொப்பூழுக்கும் இடைப்பட்ட இடம் சுவாதிட்டானம். இந்த இடத்திற்கும் மார்பின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட இடம் மணிபூரகம். இதோடு நிறுத்துவோம். இந்தப் பகுதியில் உள்ளதே ஈரல். இந்த ஆதாரங்களுக்குள் உள்ள உறுப்புகளைத் தாமரை வடிவினவாகத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

மூலாதாரம் நான்கு இதழ்த் தாமரை வடிவினதாம். சுவாதிட்டானம் ஆறு இதழ்த் தாமரை வடிவினதாம். மணிபூரகம் பத் து இதழ்த்தாமரை வடிவினதாம். பிரபுலிங்க லீலை-விமலை கதியில் இது கூறப்பட்டுள்ளது.

"இரண்டோடு இரண்டு; மூவிரண்டு ஐ இரண்டு.

இதழ்ப் பங்கயங்கள்...” (23)

இரண்டோடு இரண்டு= நான்கு மூ இரண்டு ஆறு. ஐ இரண்டு=பத்து. பங்கயங்கள்:- தாமரைகள்.

எனவே, கம்பர் ஈரலைக் கமலம் என உருவகித்ததில் ஏதோ பொருத்தம் உள்ளதாகத் தெரிகிறது.

1945 ஆம் ஆண்டு நான் மார்பு வலியால் பல திங்கள் காலம் பேச முடியாமல் படுக்கையில் கிடந்தேன். அப்போது ஒரு நாள் எழுத்தறிவே இல்லாத ஒருவர் மற்றொருவரிடம் இவருக்குக் (எனக்குக்) கமலம் மலர்ந்து போயிற்றாம் என்று கூறினார். எதைக்கொண்டு அவர் இவ்வாறு கூறினார் என்பது எனக்குப் புரியவில்லை.