பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 m ஆரணிய காண்ட ஆய்வு

அறத்தின் வலிமை

கரிய அரக்கர்கள் இழைத்த கொடுமைகளின் பயனே இந்த அழிவு. அருள் நிறைந்த அறச் செயல்களினும் வலியதாய் வெல்லக் கூடியது உண்டே? (இல்லை) "இருள்தரும் புரத்து இழுதையர்

பழுது உரைக்கு எளிதோ அருள்தரும் திறத்து அறனன்றி

வலிய துண்டாமோ? (88) இழுதையர் = அரக்கர். அவர் க ளி ன் பழுதுகள் (குற்றங்கள்) உரைக்க முடியாதவை: முன்னால் சொன்ன நிகழ்ச்சியிலிருந்து அறன் வலியது என்னும் வேறொரு கருத்தைப் பெற வைத்த இந்த அமைப்பு வேற்றுப்பொருள் வைப்பு அணி எனப்படும்.

தேவராதல்

இராமனால் இறந்து உடலினின்று உயிர் பிரிந்தவர்கள் பின் அழியா உடல் பெற்றுத் தேவராகி, மேலுலகம் சென்று கீழே நடப்பதை வேடிக்கை பார்த்து அரக்கர் அழிகின்றார் எனத் தேவரோடு சேர்ந்து கொண்டு ஆர்ப்பரித்தனராம்.

'உலந்தார் உடல் கடலோடு உற

உலவா.உடல் உற்றார் அலங்தார் கிசிசரர். ஆமென -

இமையோ ரொடும் ஆர்த்தார் (93) உலவா உடல் = அழியாத தேவ உடல், நிசிசரர்-இரவில் திரியும் அரக்கர். இறந்தவர்கள் வீரசொர்க்கம் சேர்ந்து தேவராகி விட்டதால், கீழே அரக்கர் அழிவதைக் கண்டு ஆர்ப்பரித்தனர் என்பது சுவையான கற்பனை. ஈரல் தாமரை

இறந்த அரக்கரின் ஈரல், குடல் முதலியன குருதிக் கடலில் மிதக்கின்றனவாம். இங்கே, ஈரல் செறி கமலத்தன’