பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ) ஆரணிய காண்ட ஆய்வு

என்னும் பாடலில் உள்ள கண்டவர் இல்லென என்னும் பகுதி ஒப்புநோக்கத்தக்கது.

காமத்தின் ஆற்றல்

இவ்வளவு நாள் இராவணனது வலிமைக்கு அஞ்சிக் கொண்டிருந்த மன்மதன், இப்போது மெல்லிய அம்புகளை இராவணன் மீது எய்து காமத்தை மிகுத்து அவனை வலி யற்றவனாகச் செய்து விட்டான். வலிமையைப் போக்கும் ஆற்றல் காமத்திற்கு உண்டு என்பது இதனால் போதரும்,

“மன்மதன் வாளி தூவி

கலிவதோர் வலத்தன் ஆனான் வன்மையை மாற்றும் ஆற்றல்

காமத்தே வதிந்தது அன்றே” (87)

வாளி= மலர் அம்பு. மன்மதன் இப்போது இராவணனை வருத்தும் அளவுக்கு வலிமை உடையவனாகி விட்டான். 'வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது என் பதில் வேற்றுப் பொருள் வைப்பு அணி உள்ளது.

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சக் கூடிய என் மற வலிமை, இப்பெண்ணின் நெற்றியழகைக் கண்டதும், ஐயோ, உடைந்து போயிற்றே - என்னும் கருத்துடைய -

"ஒண்ணுதற்கு ஒஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்கும்என் பீடு' (1088) என்னும் குறள் ஈண்டு எண்ணத் தக்கது.

காம வயப்பட்ட இராவணன் அரியணையிலிருந்து எழுந்து தன் படுக்கையறைப் பகுதிக்குச் சென்று காம நோயால் வருந்தினான். பின் ஒரு சோலைக்குச் சென்று அங்கிருந்த ஒரு படுக்கையில் படுத்துத் துயருற்றான்.