உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ஆண்டாள்


தலைமேல் ஏந்தித்தம் குறையை எடுத்துக்கூறி வேண்டிக் கொள்ளும் ஆரவாரம் திசைகளில் ஒருபுறம் ஒலித்தது; தெளிந்த ஒசையையுடைய மணியையடிப்பவர் கல்லென்னும் ஒசை பட ஆரவாரித்தனர்; திருமால் கோயிலில் வரம் வேண்டி உண்ணாது சிடந்த நோன்பினர் ஒருபுறமர்கக் குளிர்ச்சியுள்ள நீர்த்துறையில் நீராடிக் கொண்டிருந்தனர். இக்காட்சியைப் புலவர்,

குன்றுதலை மணந்து குழுஉக் கடலுடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக்
கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து
நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பந்
தெள்ளுயர் வடிமணி யெரியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞீலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்
கண்பொரு திகிரி கமழ்குரற் றுழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி21 -பதிற்றுப்பத்து

என்னும் அடிகளில் காட்டுகின்றார். இதைப் படிக்குந்தோறும் நீர்த்துறை படிந்த பின்னர் அப்யெரியவர்கள் திருமகள் பரவிய மார்பும், கண்களை வெறியோடச் செய்யும் சக்கரப் படையும், நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய துளவ மாலையு மணிந்த திருமரலினது திருவடிகளைப் பணிந்து நின்ற காட்சி கண்களைப் பனிப்பச் செய்கின்றது. இங்கே செல்வன் என்றது திருவனந்தபுரத்துத் திருமாலையென்பர்.

இவ்வாறு பாகவதர்கள் வழிபடுவதைக் தமது கண்ணால் கண்டதாகப் புலவர் கூறுவது இவ்வழிபாட்டின் தொன்மையைக் குறிக்கும்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று பதிற்றுப்பத்து மற்றொரு சேர அரசனைக் கபிலர் போற்றும்போது, மாய வண்ணனை மனனுறப் பெற்றவனாகப் போற்றுகின்றார். அவ்வரசன் திருமால்பால் கொண்டிருந்த பேரன்பின் காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/22&oldid=955012" இலிருந்து மீள்விக்கப்பட்டது