பக்கம்:இன்னமுதம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

"பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு” என்று மகாகவி பாரதியார் பாடினார். நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி, சிறந்த முறையில் பக்தியைப் பரப்பிய தமிழ்நாட்டில், இன்று, பக்தி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டே வருகின்றது. மிக்க இளம் பருவத்திலேயே குழந்தைகளுக்குக் கடவுள் பக்தியை ஊட்டினாலொழிய வயது சென்ற பிறகு கிடைப்பது கஷ்டம்.

கடவுளை அடைவதற்குப் பல்வேறு வழிகளைக் கண்டிருந்தாலும், அவற்றுள் எல்லாம் மிக எளிமையானது பக்திமார்க்கம் என்று இந்நாட்டவர்கள் கண்டார்கள். ஆடி, பாடி, பக்தி செய்வது என்பது குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், முதியவர்கள், இளையவர்கள் ஆகிய அனைவருக்கும் எளியதாகக் கைகூடக் கூடிய ஒரு சிறந்த வழியாகும்.

அறிவுத் துறையில் முன்னேறிச் சென்று, ஒப்பற்ற ஞானத்தை உலகுக்கு உபதேசித்த ஆதிசங்கரர் கூடப் பக்தி மார்க்கத்தின் சிறப்பை எடுத்துக்கூறி 'செளந்தர்ய லஹரி!' 'சிவானந்த லஹரி' போன்ற பாடல்களை அருளிச் செய்தார். ஆகவே பக்தி மார்க்கத்தின் சிறப்பைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இளம், குழந்தைகள், இசையோடு கூடிய பாட்டுக்களில் தம்மை மறந்து ஈடுபடுவது சர்வ சாதாரணம். பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/5&oldid=1350697" இலிருந்து மீள்விக்கப்பட்டது