பக்கம்:ஆண்டாள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.சி.பா.

88



உய்யக்கொண்டார் அருளியவை

1.அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

2.குடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடி யருளவல்ல ப்ல்வளையாய்-நாடி நீ
வேங்கடவற் கெனனை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

நாயகன் நாயகி பாவம் எனப்படுவது பக்தி நூற்களிற் பலகாலும் காணப்படும் காட்சியாகும். உலகில் உள்ள எப்பொருள்களையும் ஆண்டவன் இயக்குகின்ற, காரணத்தால், ஆண்டவனை நாயகனாகவும், தங்களை நாயகியாகவும் பாவித்துப் பெரியோர் பலர் பாடல்கள் புனைந்து அந்த உறவின் வழியே பேரின்பம் துய்த்தனர். இரகுவம்சத்தில் மகாகவி காளிதாசன் ஹரி ஒருவனே புருஷோத்தமன் எனப் புகலப்படுகின்றான் என்பர். திருமால் நாயகன் என்ற நிலை யில் மற்றவை அனைத்தும் நாயகி நிலையைப் பெறுகின்றன. எனவே ரிஷிகள் தங்களை நாயகிகளாகக் கற்பனை செய்து கொண்டு, புருஷலட்சணத்துடன் விளங்கும் திருமாலை நாயகனாக எண்ணிப் பாடினார்கள். எனவேதான் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தங்களை நாயகிகளாகப் பாவித்துக்கொண்டு தங்கள் தங்கள் கடவுளரை நாயகனாகக் கொண்டு கவிதைகள் பல இயற்றினர். இவர்கள் பெரும் பாலும் ஆண்களேயாதலின் தங்களைப் பெண்களாகப் பாவித்துக்கொண்டு பாடல்கள் புனைந்தனர். ஆண்டாளுக்கோவெனில் அத்தகைய நிலைமை வேண்டுவதன்று. ஆண் பெண் வேடம் போடுவதைக் காட்டிலும், பெண்ணே பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/85&oldid=1156153" இலிருந்து மீள்விக்கப்பட்டது