உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அவள் விழித்திருந்தாள்


8

கங்கம்மா விதவிதமாகப் பலகாரங்கள் செய்து நர்மதாவையும் பட்டப்பாவையும் ஊருக்கு அனுப்பி வைத்தாள்.

“மசக்கைன்னு பொறந்தாத்துத்குப்போவா. நீ வெறுமனே போறே. திரும்பி வரச்சேயாவது...”

நர்மதாவுக்கு கேட்டுக்கேட்டு இந்த வார்தைகள் அலுப்பைத்தந்தன. பூரணியும் இதைக்கேட்டு மனம் சலித்து நின்றாள்.

திடீரென்று வந்து நிற்கும் பெண்ணையும், மாப்பிள்ளை யையும் பார்த்து வெங்குலட்சுமி பூரித்தாள். “நன்னாப்பெருத்துட்டேடி. புதுசிலே அப்படித்தான் இருக்கும்... அவன்தான் அப்படியேஇருக்கான். அவனுக்கும்சேர்ந்து நீ பெருத்துட்டே”

நர்மதா எப்போதும்போலத்தான் இருந்தாள். மகளின் சோர்வைக்கூட அவள் கவனிக்கவில்லை.

அண்ணாவுக்குப் பணக்காரத் தங்கை வந்திருக்கிறாள். அவள் செலவில் நிறைய சினிமா பார்க்கலாம் என்று நினைத்தான். பட்டப்பா உடனே கிளம்பிவிட்டான். அங்கே இங்கே கடன் வாங்கி மாப்பிள்ளைக்கு விருந்து வைத்தாள் வெங்குலட்சுமி.

நர்மதா வந்திருப்பது எப்படியோ சாயிராமுக்குத்தெரிந்து விட்டது.

“என்ன சமாச்சாரம்?” என்று கேட்டபடி உள்ளே வந்து உட்கார்ந்தான்.

“சொல்லுங்கோ”

“நீதான் சொல்லணும். புதுசா கல்யாணம் பண்ணிண்டு புருஷனோட இருந்துட்டுவந்திருக்கே. புதுப்புது அனுபவங்கள்”