பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆத்மாவின் ராகங்கள் வேதாரணியத்தில் கைதாகி சிறைக்குப் போய் விட்டதாலும் யோசனைகளை ராஜாராமன் சொல்ல வேண்டியிருந்தது.

மேலுரிலிருந்து அவன் மதுரை திரும்பும்போது இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் தகவலைச் சொல்லிவிட்டு வாசகசாலைக்குப் போக நினைத்தான். அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா அவனுக்கு அந்தத் தகவலைச் சொன்னாள்:

'நீ திரும்பி வந்தா, வாசகசாலைக்கு வரவேண்டாம்னு பத்தர் உங்கிட்டச் சொல்லச் சொன்னார். அஞ்சு மணிக்கு முத்திருளப்பனும், குருசாமியும் வந்தாங்களாம். போலீஸ் பிடிச்சிண்டு போயிடுத்தாம். நீ வர வேண்டாம்னு பத்தர் வந்து அவசர அவசரமாச் சொல்லிவிட்டுப் போனார்.'

அம்மாவின் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் எதுவுமே பிடிக்காதது போன்ற மனத்தாங்கல் அந்த முகத்தில் தெரிவதையும் ராஜாராமன் கண்டான். நிதானமாக அவன் அவளைக் கேட்டான்.

'பத்தர் எப்ப வந்தார்?'

'இப்பதான், சித்த முன்னே வந்து சொல்லிட்டுப் போறார். நீ போக வேண்டாம்டா குழந்தை. நான் சொல்றதைக் கேளு... என்னை வயிறெரியப் பண்ணாதே! வயசு வந்தவன் இப்படி அலையறதே எனக்குப் பிடிக்கல்லே.' . -

அவன் தாயின் குரல் அவனைக் கெஞ்சியது. ஏறக் குறைய அவள் அழத் தொடங்கிவிட்டாள். அக்கம்பக்கத்து ஒண்டுக் குடித்தனக் காரர்கள் கூடிவிடுவார்கள் போலிருந்தது.

‘'எதுக்கம்மா இப்பிடி அழுது ஒப்பாரி வைக்கிறே9 ஊர்

கூடி விசாரிக்கனுமா இப்ப என்ன நடந்துடுத்து போக வேண்டாம்னாப் போகலை...