உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

21

முகம் கழுவினாள். சில்லென்று நீரை வாரி வாரி முகமெங்கும் வழிய விட்டு முதல்நாள் ஏற்பட்ட மன உளச்சலை தீர்த்துக்கொள்ள முயன்றாள். உள்ளே வந்தாள்.

“கங்கம்மா சுடச்சுட காப்பி கலந்து எடுத்து வந்தாள் இன்னும் பால், சர்க்கரை ஏதாவது வேணுமாச்சொல்லு”

“சரியா இருக்கு. நான் இவ்வளவு பெரிய டம்ளரிலே காப்பி சாப்பிடறதில்லை. ரொம்பப்பெரிய டம்ளர்”

“நன்னா சாப்பிடணும். அரை வயித்துக்குச் சாப்பிடறதை இனிமே விட்டுடு, உனக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லை. வீட்டிலே சகல சாமானும் கொட்டி வச்சிருக்கு- நானே சமையல் பண்றேன். நீ கடந்து கஷ்டப்படாதே. கூட மாட ஒத்தாசை பண்ணு போறும். என்ன சமைக்கலாம்?” என்று சொல்லிக் கொண்டே கூடை நிறைய காய்கறிகளை எடுத்து வந்து வைத்தாள்.

கறிகாய், சமையல் என்று எதிலும் பற்று இல்லாமல், “உங்க இஷடம் போல பண்ணுங்க. எனக்கு எல்லாமே பிடிக்கும். பிடிக்கிறதும் பிடிக்காததும் மனசைப்பொறுத்த விஷயம்” என்று ஏதோ பேசினாள்.

“அப்படியில்லைடி நர்மதா! எனக்கு இருக்கிறது ஒரே தம்பி. அவனும் நீயும் சந்தோஷமா இருக்கிறதுதான் எனக்கு முக்கியம். அவன் கொஞ்சம் அசடு. இந்தக்காலத்து பிள்ளைகள் மாதிரி இருக்க மாட்டான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பொறுத்துண்டு போகணும்.”

நர்மதா குனிந்தபடி கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் முன்னே பின்னே என்றால், புரியமாட்டேன்கிறது. அழகின் பரவலாய், ஒரு ஆடவனே மயக்கும் சக்தி இந்த கண்களுக்கு, அதரங்களுக்கு இருக்கிறது. அவள் படுக்கையில் சாய்ந்து கிடந்தபோதும். ஒருக்களித்து இருந்த போதும் அவன் விலகி விலகி ஒதுங்கிப்போகக்கூடிய அசடனாகவா இருக்கிறான்? ஐயோ கடவுளே! இந்ந அசடை எப்படி சமர்த்தனாக்குவது?

கங்கம்மா ஏதேதோ ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாள். பெரிய அளவில் வெங்கடாஜலபதியின் படம் மாட்டியிருந்தது. மிக சாந்நித்தியமாக இருந்தது அவர்