பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y Ꮾ அவள் விழித்திருந்தாள்

'எனக்குப்பொதுவா ஆம்பிள்ளைகளைக் கண்டாலே பிடிக்கலை”

'பாலுவை? சாயிராமை?”

'பாலுவையா? பொண்டாட்டியை ஏமாத்தறவனையா? அனைப்பிடிக்கறதா நர்மதா பேசாமல் இருந்தாள். பட்டப்பா கை அலம்பிக் கொண்டு அவள் அருகாமையில் வந்தான்். 'நீ கல்யாணத்

துக்கு முன்னே அவனைக்காதலிச்சே. அது உன் மனசில் புகைஞ்சுண்டே இருக்கு. ஊருக்குப்போன எங்கேயாவது அவன் கிட்டே ஏமாந்துடப்பேறோம்னு பயப்படறே. அதான்் போகமாட்டேங்கறே.'

அவள் தன் எதிரில் இருந்த சுவரைப்பார்த்தபடி நின்றாள்.

வாஸ்தவம்தானே சாயிராம் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவளுக்குள் ஒரு சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது. அவன் அவள் அழகை வர்ணித்த போதெல்லாம் அவள் மகிழ்ந்து போயிருக்கிறாள். அதற்கெல்லாம் ஒ ரு வடிவம் கொடுப்ப தற்குமுன்பே அம்மா இந்தக்கல்யான த்தை நிச்சயம் பண்ணிக் கொண்டு வந்துவிட்டாள். சொப்பனம் போல கல்யாணமும் நடந்து விட்டது. 'நான் சொல்கிறது உண்மைதானே" என்று துாண்டித்துருவிக் கேட்டான் அவன்.

"ஆமாம் அவர் மேலே எனக்கு ஆசை இருந்தது. ஆனா உங்களைக் கல்யாணம் பண்ணிண்ட அப்புறம் அதைப்பத்தி நினைக்கலை. நான் மறந்தே போயிட்டேன். அவர் இங்கே ஒரு தரம் வந்தப்ப கூட என் மனசிலே ஒன்றும் விகல்பம் ஆசை எழலை. எப்படியோ என் தலை எழுத்து இப்படியாயிடுத்துன்னு விரக்தி பண்ணிண்டாச்சு. திரும்பத் திரும்ப என் சரீர இச்சை யைப்பத்த யே பேசிண்டிருக்கீங்க. எனக்குன்னு ஒரு சுத்த மான மனசு இருக்காதா? இருக்கக் கூடாதா? உலகத்துலே எத்தனையோ வித பசிகள் இருக்கு. அந்த மாதிரி உடற்பசியும் ஒண்னு இன விருத்திக்காக மிருகங்கள், மற்ற ஜீவன்களைப் போலத் தான்் மனுஷன் பெண்ணை நாடிப்போ கிறான். இதுக் குப்போய் இத்தனை கவலையும், குழப்பமும் ஏற்படுவானேன்?"

அவளை வியப்புடன் பார்த்தான்் பட்டப்பா. வேடிக்கை

யான பெண் அதுவும் இந்தக் காலத்தில்! தெருத்தெருவாய் கண்டபடி சினிமா போஸ்டர்கள் சீரழியும் இந்த நாட்களில்

இப்படியும் ஒருத்தி!