பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 157 அவளுக்குள்ளும் புது ஆன்மீகத் தேடல். நாத்திகையான நானே சில சமயத்தில், "அடக்கடவுளே", என்கிறேனே. அதே கோணத்தில்தான் இவருக்கும். இவருக்கு இந்த படங்கள் ஆன்மீகத் தேடல் என்ற அல்ஜிம்ரா பிரிவின் எக்ஸ், ஒய் மாதிரி. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் நிகழ்ச்சிகள் எப்படி தோன்றுகின்றன என்கிற விஞ்ஞானப் பாடம். பெரும்பாலோர்க்கு தெரியாததுதான். ஆனால் ரிமோட் கண்ட்ரோலில் எந்த எண்னை அழுத்தினால் எந்த ம்ாதிரியான நிகழ்ச்சிகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். இவருக்கும் தெய்வப்படங்கள் எனப்படுபவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் காட்சிகளே. தொடர்பியல் விஞ்ஞானமல்ல. போலியற்ற அறியாமை. அதுவே அவருக்கு தெளிவைக் கொடுக்கும் மெஞ்ஞானம். அந்தம்மா, கணவரின் தோளில் கை போட்ட ஒளவையார் பிராட்டியானார். "இந்த படங்கள நீங்க எடுக்க வேண்டியதில்லை. ஏன்ன? நீங்க இந்தப் படங்களை தெய்வசக்தியாய் நினைக்காமல், இவற்றின் வழியாய் அந்த சக்தியைப் பார்க்கீங்க. ஒங்களோட ராமன் கபீரின் ராமன் அதாவது வில்லேந்திய ராமனல்ல. சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமனும் அல்ல. அதற்கும் மேலான ராமன். அருவத்தை உருவப்படுத்துகிறீர்கள் அவ்வளவுதான்.” 'நமது தேசியக் கொடி வெறும் துணிதான்." ஆனால் அதற்கு இருக்கும் சக்தி. அரசுக்கே கிடையாது. பாரத மாதா. படத்தில் இருப்பதுபோல் இருக்கிறாளா. தமிழ்த்தாய் என்று, பெண்ணனங்கு ஒருத்தி இருக்கிறாளா ஆகக்கூடி, கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்தப் படங்கள், ஒங்களுக்கு கடவுளின் உருவங்கள் அல்ல. உருவகங்கள். பூமத்திய ரேகை ஒரு கற்பனைக் கோடுதான். . ومع إ سناتي