226 ஆத்மாவின் ராகங்கள்
உள்ளிருந்து ஜமீன்தாரிணி அம்மாள் எதிர்ப்பட்டாள்.
அழுதழுது அவள் கண்கள் வீங்கியிருந்தன. தலைமுடி
அவிழ்ந்து முதுகில் புரண்டு கொண்டிருந்தது.
'ஆசிரமத்திலே பிருகதீஸ்வரனுக்கும், மதுரையிலே அவ மனுஷ்யாளுக்கும் சொல்லி அனுப்புங்கோ. நாம் கொடுத்து வச்சது அவ்வளவுதான்' - என்று நிதானமாய் ஒவ்வொரு வார்த்தையாய் அவள் ராஜாராமனிடம் வந்து கூறினாள். கூறி முடிக்கு முன்பே அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு. ராஜாராமன் கோவென்று கதறியழுது கொண்டே உள்ளே ஓடினான். w .
சரீரத்தோடு அவனை அடைவதற்கு ஆசைப்பட்ட மதுரம், சரீரத்தை நீத்து ஆத்மாவாகவே அவனுள் வந்து கலந்து விட்டாள். 'சங்கீத உலகத்துக்கு மிகப் பெரிய நஷ்டம் இது'என்று வெளியே டாக்டர், ஜமீன்தாரிணியிடம் சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. சங்கீத உலகத்துக்கு நஷ்டம் மட்டும்தான். எனக்கோ என் உலகமே இருண்டு போய்விட்டதே'- என்று கதறியது அவன் உள்ளம்.
புன்முறுவல் பூத்தபடி, உறங்குவது போல, வாடிய ரோஜா மாலையாகக் கட்டிலில் கிடந்தது மதுரத்தின் சரீரம். அந்தக் குடும்பத்தின் வழக்கம்போல் சுமங்கலிகள் இறந்தால் செய்யும் முறைப்படி அவள் கைகளை நெஞ்சில் குவித்து பூவும் மஞ்சள் கிழங்கும், குங்குமச் சிமிழும் அவள் கைகளின் அருகே நெஞ்சில் வைக்கப்பட்டிருந்தன. அபூர்வமாக அன்று பகலில் அவள் தலைவாரிப் பின்னிப் பூ வைத்துக் கொண்டதும், பெட்டியிலிருந்து வளைகளை எடுத்து அணிந்து கொண்ட்தும், ராஜாராமனுக்கு நினைவு வந்தன. அவன் அப்படியே ஸ்தம்பித்துப் போனான். கண்கள் வற்றுகிறவரை அழுது கொண்டே நின்றான். இப்படிப் போவதற்காகவே, அன்று பகலில் அவள் அவன். இலையில் சாப்பிட்டுவிட்டு அந்த அல்ப மகிழ்ச்சியிலேயே யுகம் யுகமாகத் தாம்பத்யம் நடத்திவிட்டாற் போன்ற பரிபூரணத் திருப்தியோடு எழுந்திருந்தாளோ என்று அவன் மனம்