பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 121 சொல்லியதனாலோ, அவனிடம் அப்படிக் கேட்டால் அவன்

கோபித்துக் கொள்வான் என்று கருதியதனாலோ, அவர்

கேட்கவும் இல்லை. கேட்காவிட்டாலும், விட்டுக்

கொடுக்காமல் சில காரியங்களைச் செய்து விடுகிற

சமயோசித சாமர்த்தியம் பத்தரிடம் உண்டு என்பது

ராஜாராமனுக்குத் தெரியும். 'உன்னைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டுப் போகணும்னு தான் பார்த்தாரு முடியலை.

'நீங்களே ஒரு வார்த்தை சொல்லிடுங்க பத்தரே ன்னு

சொல்லி விட்டுப் போனாரு என்பதாகச் சொல்லிக் கொண்டு

விடுகிற சாமர்த்தியம் ப்த்தரிடம் இருந்ததால் இப்போது

அவன் நிம்மதியாகத் திரும்பினான்.

மேலூரிலிருந்து திரும்பி, காலை பதினொரு மணிக்கு அவன் வாசகசாலை மாடிப்படியேறியபோது, 'தம்பி ஒரு நிமிஷம். இதைக் கேட்டிட்டுப் போங்க என்று பத்தர் குரல் கொடுத்தார். வேகமாக மேலே படியேறத் தொடங்கி யிருந்தவன் மறுபடி கீழே இறங்கி, கில்ட் கடை முகப்பில் வந்து நின்றான். என்ன ஆச்சரியம்! அவன் எதை நினைத்துக் கொண்டே வந்தானோ அதையே அவனிடம் வேண்டினான் அவர் 'அதென்ன மேலுனர் போனாலும் போவேன்னிட்டுப் போனீங்க. ஒரேயடியாப் போயிட்டிங்களே. ராத்திரியே. திரும்பிடுவிங்கன்னு பார்த்தேன். மதுரம் ஏழுெட்டு வாட்டி எங்கே எங்கேன்னு கேட்டுச்சு. அப்புறம் தான் சொன்னேன் - அதுங்கிட்டச் சொல்லச் சொல்லி நீங்க எங்கிட்டச் சொல்லிவிட்டுப் போனதாக ஒரு பொய்யும் சொன்னேன். 'நான் யாரிட்டவும் யாருக்காகவும் சொல்லிட்டுப் போகலையே:ன்னு மூஞ்சிலே அடிச்ச மாதிரிப் பதில் சொல்லி விடாதீங்க... - -

"அதிருக்கட்டும் பத்தரே இப்ப நீங்க எனக்கு இன்னொரு உபகாரம் பண்ணனுமே! ம்ேலூர் நிலம், வீடு எல்லாத்தையும் விலை பேசி அட்வான்சும் வாங்கியாச்சு. அந்தப் பணத்தை உங்ககிட்ட கொடுத்து வைக்கிறேன். பத்திரமா வச்சிருக்கணும்...' ... " -