பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஆத்மாவின் ராகங்கள் குடும்பத்தில் எல்லாரும் ராட்டை நூற்கப் பழகி யிருந்ததையும், மனைவி குழந்தைகள் உட்பட அனைவரும் கதரணிந்திருந்ததையும் பார்த்துப் பெருமைப்பட்டான் அவன்.

அவன் மதுரை திரும்பும்போது காரைக்குடி வரை பிருகதீஸ்வரனும் கூட வந்தார். காரைக்குடியிலும் அவர்கள் சந்திக்க வேண்டியவர்கள் இருந்தார்கள். காரைக்குடியில் அவனுக்கு விடை கொடுக்கும்போது, “நாளையிலிருந்து நானும் என் மனைவியும் பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டே தெருத் தெருவாய், எங்கள் புதுக் கோட்டைச் சீமையிலுள்ள கிராமம் கிராமமாய்க் கதர்த் துணிகளைச் சுமந்து விற்கலாமென்றிருக்கிறோம். மதுரையில் நீங்களும் அது மாதிரி ஏதாவது செய்தால் எனக்குச் சந்தோஷமாயிருக்கும்' - என்று சொல்லியனுப்பினார் பிருகதீஸ்வரன். கதர்ப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவனும் அவருக்கு வாக்குக் கொடுத்தான். ஒருவரை ஒருவர் பிரிவது பரஸ்பரம் இருவருக்குமே வேதனையளிப்பதாயிருந்தது; அவருடைய நட்பின் அருமையைப் பல மாதங்கள் உடனிருந்து பழகியபோது உணர்ந்த தைவிட இப்போது இந்தப் பிரியும் விநாடிகளில் மிகமிக அதிகமாக உணர்ந்தான் ராஜாராமன். அவன் மதுரைக்கு வந்த நேரம் இரவு எட்டு மணிக்கு மேலிருக்கும். புறப்படுகிற தினத்தன்று இப்படி இருட்டில் தான் புறப்பட்டோம் என்பது நினைவு வந்தது. மேலக்கோபுர வாசலுக்கு வந்து நின்ற போதுதான் எங்கே போய்த் தங்குவது என்ற கேள்வி எழுந்தது. தாய் இறந்த அந்த வீடு மிக அருகிலேயே இருப்பதை உணர்ந்த போது மனம் நெகிழ்ந்து அழுதது. வைத்தியநாதய்யர் வீட்டுக்கோ, ஜோஸப் சார் வீட்டுக்கோ போகலாம் என்று தோன்றினாலும், பொது வேலைகளைச் செய்வதற்கு வாசகசாலையில் தங்குவதே நல்லதென்று நினைத்தான் ராஜாராமன்.

'பத்தர் வாசகசாலையைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போயிருந்தால் என்ன செய்வது? - - ..