பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 171 வேண்டியிருந்தது. சிலர் பண உதவிக்குப் பதில்

கருத்துக்களை உதவி செய்ய முடிந்ததும் பயன்படவே

செய்தது. பண உதவி செய்கிற நிலையில் எல்லோரும்

இல்லை.

ஒருநாள் பிருகதீஸ்வரனும், ராஜாராமனும், வடக்கு மாசி வீதியில் வந்து தங்கியிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைச் சந்திக்கப் போயிருந்தனர். தேவருடன் சசிவர்ணத் தேவரும் இருந்தார். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டு சாயல்குடி விவேகாநந்தர் வாசக சாலையில் முதலாவது ஆண்டு விழாவில் முத்துராம லிங்கத் தேவர் ஆற்றிய விரவுரை விவேகாநந்தரே நேரில் வந்து பேசுவதுபோல் அவ்வளவு சிறப்பாக இருந்ததென்று காமராஜூம் சீநிவாசவரதனும் அடிக்கடி சிறைவாசத்தின் போது சக சத்யாக்கிரகிகளிடம் வியந்து கூறியதுண்டு. ராஜாராமனுக்கு இப்போது அது நினைவு வந்தது. தேவர் தமது கம்பீரமான தோற்றத்தோடு சத்திய ஆவேசம் நிறைந்த குரலில் அவர்களோடு உரையாடினார். உதவிகளுக்கும் வாக்களித்தார். பாரதா முத்துத் தேவர் குடும்பத்தினரையும் பார்க்கச் சொல்லி அவரே யோசனையும் கூறினார். தேவரைப் பார்த்தபின் மெளலானா சாகிப் மூலம் சில முஸ்லீம் தேசபக்தர்களையும் சந்தித்தார்கள் அவர்கள். இக்னேஷியஸ் முதலிய கிறிஸ்தவ சகோதரர்களும் முடிந்தவரை உதவினர். திருமங்கலத்தில் விசுவநாத தாஸோடு முன்பு எப்போதோ பல காங்கிரஸ் கூட்டங்களில் சந்தித்திருந்தவர்கள் சிலரும் இதற்காக முன் வந்து உதவினர். * . . .

அப்போதே தனி நபர் சட்டமறுப்பில் யார் யார் முதல் அணியாக ஈடுபட்டுச் சிறை சென்றுவிட்டார்களோ அவர்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. எனவே, ஆசிரம முயற்சி போதுமான பண வசதியின்றித் தள்ளிப் போடப்பட்டது. தங்கள் நிதிக்குப் பணம் கேட்காததோடு, அப்போது கவர்னர் வசூலித்துக் கொண்டிருந்த யுத்த நிதியை எதிர்த்துத் தேசபக்தர்கள் பிரசாரமும் தொடங்கினர்.