பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 237

தன் தாயின் மரணம், தான் நிலம் கரைகளை விற்றுத் தேச சேவைக்குச் செலவழித்தது, எல்லாத் துயரத்தையும் உணர முடியாமல் தன்னை ஊக்கிய அன்பின் ஒளி எது என்பதை இப்போது அவன் நன்றாக உணர்ந்திருந்தான். மதுரம் செய்த தியாகங்களின் ஒளியில் தன்னைச் சுற்றியிருந்த அந்த காரங்கள் எல்லாம் மறைந்து, தான் உலகின் பார்வையில் பல தியாகங்களின் சொந்தக்காரனாகத் தோன்றியிருப் பதையும் உணர்ந்தான் அவன். பக்தியின் சுகத்தை அனுபவிக்கிறவர்களால் தான் பக்தி செய்யவும் முடிகிறதென்ற தத்துவத்தை வாழ்க்கையில் அநுபவங்களால் இப்போது புரிந்து கொண்டிருந்தான் ராஜாராமன். தன்னுடைய புஷ்பங்களால் அவனுடைய பாதங்களில் அர்ச்சித்தாள் மதுரம். அவனுடைய புஷ்பங்களால் பாரத மாதாவின் பாதங்களை அர்ச்சித்திருந்தான். அவன். உதாசீனத்திலிருந்து அன்பின் எல்லைக்கு அவனை அழைத்து வந்தவள் அவள் வெறுப்பிலிருந்து பிரியத்தின் எல்லைக்கு அவனை அழைத்து வந்தவள் அவள் சிறைச்சாலையின் துன்பங்களை அவன் தாங்கிக் கொள்ளச் செய்தது - அவள் பிரியமாயிருந்தது. தெலியலேது ராமா பக்தி மார்க்கமு: என்று அவள் பாடிய போதெல்லாம் தான் தேசத்தைப் பக்தி செய்யும் மார்க்கங்கள் ஒவ்வொன்றாக அவனுக்குப் புரிந்தன.

அந்த வருஷக் கடைசியில் ஆசிரமத்தின் பள்ளிக்கூடம் அரசாங்க அங்கீகாரம் பெற்றது. ஆசிரமக் கட்டிடங் களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஒரு பெருந்தொகை அரசாங்க கிரான்ட் ஆக வழங்கப்பட்டது. ஆசிரமத்தின் பணிகள் வளர்ந்து விரிவடைந்தன. அதிக வகுப்புகளும், பலதுறை ஆசிரியர்களும் வந்தார்கள். சமூக சேவகர்களைத் தயாரிக்கும் சோஷியல் செர்வீஸ் டிரெயினிங் வகுப்பு களும், பெண்களுக்கான மாதர் நலத்துறையைப் பயிற்றும் வகுப்புக்களும் கிராமப் புனருத்தாரணத்தை விளக்கும் ருரல் செர்வீஸ் டிரெயினிங் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. தெற்கே உருவாகும் புதிய யுவ இந்தியாவின் சாந்தி நிகேதனமாக அது வளர்ந்தது. அநாதைப் பெண்கள் பலர்