பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி † 63 போத்தனூரில் அவிநாசிலிங்கம் செட்டியார் நடத்திவந்த ராமகிருஷ்ண வித்தியாலயத்தை முன் மாதிரியாகக் கொள்ளுமாறு நண்பர்கள் சிலர் யோசனை கூறினர்.

அடுத்த வெள்ளிக்கிழமையே தாமதமின்றி மாந்தோப்பை ஆசிரமத்துக்காகப் பத்திரம் பதிந்து சாஸனம் செய்து கொடுத்துவிட்டாள் மதுரம். வீட்டுக்கு வரவழைத்து பிருகதீஸ்வரன் முன்னிலையில் மதுரமே ராஜாராமனிடம் அதைக் கொடுத்தாள். r

அடக்க ஒடக்கமாக அவனைப் பாதங்களில் சாஷ்டாங்கமாக வணங்கி, எழுந்து அந்தப் பத்திரத்தை மதுரம் கொடுத்த விதம் பிருகதீஸ்வரன் இதயத்தை நெகிழ வைத்தது.

'இதே தெருவில் உன்னையொத்த வயதிலுள்ள பெண்கள் எப்படி எப்படி எல்லாம் சொத்துச் சேர்க்கலாம் என்று அலைந்து கொண்டிருக்கும்போது, நீ உன்னுடைய சொத்துக்களைப் பவித்திரமான காரியங்களுக்காக ஒவ்வொன்றாய்த் தியாகம் செய்து கொண்டிருக்கிறாய் அம்மா! கடவுள் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டார். மீனாட்சி கிருபையால் உனக்குச் சகல ஐஸ்வரியமும் பெருகும், ' என்றார் பிருகதீஸ்வரன். மதுரம் அவரையும் வணங்கி எழுந்து, அடக்கமாகக் குனிந்த தலைநிமிராமல் நின்றாள். . . . . . . ... و - -

'என்னுடைய சகல ஐஸ்வரியமும் இவர்தான் என்று ராஜாராமனைச் சுட்டிக்காட்டிச் சொல்லிவிடத் தவிப்பது போல அவளது இதழ்கள் துடிதுடித்தன. மன்மதனின் ஆசை நிறைந்த விழிகளின் சிவப்பைப் போல சிவந்திருந்த அந்த இதழ்களில் நாணி மறையும் புன்னகை ஒன்று ஒரு சீராக எரியும் குத்துவிளக்கின் ஒளியைப் போல் நிரந்தரமாக ஒளிர்ந்து கொண்டிருப்பதாக ராஜாராமனுக்குத் தோன்றியது. எல்லாப் பற்களும் தெரியும்படி அவள் அரட்டையாகச் சிரித்து, அவன் பார்த்ததேயில்லை. விலை மதிப்பற்ற வெண்