பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 209 வேறுபாடுகள் படிப்படியாக வளர்ந்து, மகாத்மா ஏற்படுத்திய சுதேசி விரதத்தைப் பாதிக்கக் கூடாதே என்றுதான்மீண்டும் மீண்டும் அவர்கள் எல்லாருமே கவலைப்பட்டார்கள்.

அன்று இரவே ஒர் இரட்டை மாட்டு வண்டி அமர்த்திக் கொண்டு பிருகதீஸ்வரனும், ராஜாராமனும் நாக மங்கலத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஆசிரமத்தி லிருந்து புறப்படும்போதே மழை பிடித்துக் கொண்டது. பாதை நல்ல காட்டுப் பாதை. போகப் போக மழையும் கடுமையாகியது. வழி நெடுக அங்கங்கே காட்டு ஓடைகள் குறுக்கிட்டன. ஓடைகளில் நீர்ப்பெருக்குத் தணிகிறவரை பிரயாணம் தடைப்பட்டது. ஆசிரமத்துக்கும் நாக மங்கலத்துக்கும் இருபது மைலுக்கு மேலிருக்காது என்றாலும் கடுமையான மழை காரணமாக அங்கங்கே நின்று பயணம் செய்து மறுநாள் காலையில்தான் அவர்கள் நாகமங்கலத்துக்குப் போய்ச் சேர முடிந்தது. நாகமங்கலம் ஊருக்குள் இருந்த ஜமீன் அரண்மனைக்கு அவர்கள் முதலில் சென்றார்கள். ஆனால், அவர்கள் போன போது ஜமீன் தாரிணியோ, மதுரமோ அரண்மனையில் இல்லை. கூடியரோகத்துக்கு மாற்றான நல்ல காற்றுக்காக டாக்டர் இடம் மாறச் சொல்லியிருந்ததை முன்னிட்டு ஆறு மைல்களுக்கு அப்பால் நாகமங்கலத்துக்கு மேற்கே மலையடிவாரத்தில் இருந்த ஜமீனுக்குச் சொந்தமான கோடை வாசஸ்தலத்தில் அவர்கள் போய் தங்கியிருப்பதாக தகவல் கூறப்பட்டது. உடனே ராஜாராமனும், பிருகதீஸ்வரனும், தாங்கள் வந்த இரட்டை மாட்டு வண்டியிலேயே மலையடிவாரத்துக்கு விரைந்தனர். எவ்வளவோ முயன்றும் மேடும் பள்ளமுமாக இருந்த மழை காலத்து வண்டித் தடத்தில் வேகமாக வண்டியை ஒட்ட முடியவில்லை. -

ஜமீன் கோட்டை வாசஸ்தலத்துக்கு அவர்கள் போய்ச் சேரும் போது காலை பத்து மணிக்கு மேலாகிவிட்டது. ஜமீன்தாரிணி அவர்களை மிகவும் பிரியமாக வரவேற்றாள். அன்று வெள்ளிக்கிழமையாதலால் அவர்கள் போய்ச்

ஆ.ரா - 14