பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 வாடாத பயிர் அவ்வளவுதான், அவனுக்குத் தெரியும். ஏதோ பாய்வது மாதிரி பாய்ந்தான். முத்து, தான் முன்பு விழவைத்த இடத்தில் விழுந்து கிடந்தான். அவன் வயிற்றில், வேல்சாமியின் கால் இருந்தது. ரூபாய் நோட்டுக்கள் சிதறிக் கிடந்தன. அம்மாவும் மகளும் ஆனந்தமான அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு பின்னர் நிதர்சனம் புரிந்தவர்களாய் முத்துவை விடும்படி வேல்சாமியை மன்றாடினார்கள். வேல்சாமியும் விட்டான். முத்துவும் நொண்டிக்கொண்டே வெளியே ஒடினான். பிறகு, வேல்சாமி பிரதான எதிரியான தங்கையை அடிக்க ஆயத்தம் செய்தபோது, அவள் "என் தங்க அண்ணாச்சி. இன்னைக்கிதான் நீ மனுஷனாய் ஆகி இருக்கே” என்று சொல்லி, அவன் கையை எடுத்து முத்தமிட, அடிக்கப்போன வேல்சாமி அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அன்றிரவு வேல்சாமியால் தூங்க முடியவில்லை. உள்ளங்கையை விரித்து வேல் ரேகை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான். . காலண்டர் முருகனை மார்புடன் சேர்த்து அணைத்தபடி, தூங்குவதுபோல் கிடந்தான். ஏதோ ஒரு பரவச உணர்வு உடலெங்கும் பரவியது. ஆகாயத்தில் பறப்பது போன்ற புளகாங்கிதம். தன்னுள்ளே, ஏதோ ஒன்று பேசுவது போன்ற ஆனந்தம். தனக்கும், 'எல்லா வல்ல ஏதோ ஒன்றுக்கும் ஆதியந்தம் அற்ற பந்தம் ஒன்று இருப்பது போன்ற கண்ணோட்டம். வேல்சாமிக்கு, தாத்தாவின் நினைவு ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சூன்யமானவர். அதன் சூட்சமத்தி உணர நினைத்து, தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்துக்கொண்டிருந்தவர். அவர் மேலே போனபோது அந்த நூல்களும், மேலே போயினபரணுக்கு வேல்சாமிக்கு இப்போது எந்நாளும் இல்லாத ஒரு ஆசை..