பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 93 தாத்தா படித்த புத்தகங்கள், எப்படித்தான் இருக்கும் என்பதை அறியும் ஆவலில், அவன் நள்ளிரவில் பரனைத் துழாவினான். பல்லி பாசான்களோடு, பல நூல்கள் விழுந்தன. எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படித்து, கல்லூரியில் மாணவர்களின் ரேக்கிங்'கால் பாதிக்கப்பட்டு ஊருக்கு ஓடிவந்த இவன் , இப்போது புத்தகங்களை, பயபக்தியோடு எ டு த் தா ன் அவ னால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லையென்றாலும், புரட்ட முடிந்தது. அப்படிப் புரட்டப் புரட்ட தனக்குள் ஏதோ ஒன்று புரண்டது. ஆன்மாவோ, அடி மனசோ அறியான். ஒராண்டு காலம் பாதி தாத்தாவின் புத்தகங்களை படிப்பிலும் பாதி உழைப்பிலும் செலவாயின. வேல்சாமி வழக்கம்போல் வயலுக்குப் புறப்பட்டான். இரவிலும், அதிகாலையிலும் படித்துப் பார்த்த தாத்தாவின் புத்தகங்கள், அவனுக்குப் புதிய உலகை, அகத்திலும் புறத்திலும் காட்டின. வேல் ரேகையை விழிப்போடு பார்த்துக்கொண்டு, வழியில் முருகன் கோயிலை வாஞ்சையோடு வணங்கிவிட்டு பாலத்தருகே வந்தான். காலங்காத்தாலேயே, மேக்கப்போடு உட்கார்ந்திருந்த அந்த நால்வரையும் நன்றியுடன் நோக்கினான். பழைய கிருஷ்ணன், புதிய வேல்சாமியைப் பார்த்து, "என்ன மாப்பிள்ளை. போன வருஷம் கைபார்த்தேன் பாரு. அப்போ இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். ஒன் கையில் உடுக்கு ரேகையும் இருக்கு ஒன்னால அநியாயத்த பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. ஒன் தங்கச்சி இப்போகூட எங்களப் பாத்து ஜாடையா திட்டிக்கிட்டு போனாள். அடிக்கடி அவளை தலையில தட்டி வை மாப்பிள்ள" என்றார். வேல்சாமி, எங்கேயோ தொலை தூரத்தைப் பார்ப்பவன் போல் நின்றான். உடனே பெருமாள், அவரு நிஷ்டையில் நிக்கார். அதக் கலைக்கப்படாது' என்றான். ராமன், பெருமாளை விலாவில் இடித்தபடி சிரித்தான். . 3