உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கொண்டே சொன்னார்கள். அவர்கள் நகைச்சுவைக்குச் சொன்னார்களா? உண்மை சொன்னார்களா? அது இன்னும் பிடிபடவில்லை.

அவர்கள் சொன்னது மற்றொன்று மிகவும் தெளிவானதாக இருந்தது. இந்த ஆறுவார விடுமுறையில் நான் பெறும் புதிய அனுபவங்கள்; காணும் ஊர்கள், காட்சிகள் (அதோடு நிற்கவில்லை) இங்கே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வளர்ச்சிகள் இவற்றை எல்லாம் குறித்துக்கொண்டு அவரிடம் பேசுவேன்; அவரும் தன் அனுபவங்களை என்னிடம் சொல்லுவார். நாங்கள் மறுபடியும் சந்தித்து வாழும் போது எனக்குப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அவருக்கும் நிறைய இருக்கும். இரண்டுபேரும் ஒரே ஊரைப் பார்த்தால் வேறுபட்ட அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? என்று விளக்கினார்கள்.

அந்த மனோநிலையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் கேளிக்கையாக ஊர் சுற்றவில்லை. பொழுது போக்குக்காக அவர்கள் அங்குச் செல்லவில்லை. அவரவர் பயிலும் வாழ்க்கைத் துறைகள் இருக்கின்றன; புதிய துறைகளையும் அறிய விரும்புகிறார்கள். அவற்றைக் குறித்துக்கொள்கிறார்கள். முன்னைவிட கூடுதலான் அறிவோடு சொந்த ஊர் திரும்புகின்றனர்.

அண்மையில் “இதயக் கோயில்” என்ற திரைப்படம் பார்த்தேன். அம்பிகா காதலியாக நடிக்கிறார்; ராதா ரசிகையாக நடிக்கிறார். மோகன் கதாநாயகன்; அவன் ஒரு பாடகன். அவன் தன் காதலியை மணக்க முடியாமல் அவள் சாவு இடையே வருகிறது. அவளுடைய மணத்தை அவள் முடிவு செய்ய முடியவில்லை. அப்பா கட்டிவைக்கும் புதுப் புருஷனையே அவள் மணக்கவேண்டும் என்பது அவர் கட்டளை. அப்பா பெண்ணுக்கு உதவி செய்யலாம்; அவளாகக் கணவனைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில்