20
விலையாயினும் எவ்வளவு அரிய மருந்தாயிலும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் மருத்துவச் சீட்டைக் காட்டினால் தரப்படுகிறது என்றால் அரசாங்கம் மக்களின் உயிர்வாழ்வுக்குப் பொறுப்பு ஏற்கும் உயர்வைக் காணமுடிகிறது.
அந்தச் சிகிச்சை அகங்களில் தீர்க்க முடியாத நிலையில் அரசு மருத்துவ மனைக்கு அவர்கள் அனுப்பப்படுகின்றனர். அங்கே வசதிகள் அதிகம்; தங்கி இருந்து சிகிச்சை பெற இடமும் தரப்படுகிறது. நான்கைந்து சிகிச்சை அகங்களின பொது அமைப்பாக இது செயல்படுகிறது. அதுவும் அவர்களைக் கவனிக்க முடியாத நிலையில் ‘பெரு மனைக்கு’ (Govt Hospital) நம் நகரப் பொது மருத்துவமனை போன்ற இடம் அங்கு சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்றால் அதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த நிலை நம் நாட்டில் ஏற்படவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. அரசாங்கம் துணிந்து பொறுப்பு ஏற்கிறது.
தமிழக ஆட்சியின் துணிவு
மக்கள் உயிர் வாழ்வுக்கு உறுதுணையாக நிற்பது ஆட்சியின் பொறுப்பு என்ற கோட்பாட்டில் தமிழகம் கால் வைத்துள்ளது. இதைச் செய்யமுடியாவிட்டாலும் படிக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் போதிப்பதை விட அவர்களுக்கு உணவு அளிப்பது ஆட்சியின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டு வருவது ஒரு திருப்பு நிலை என்றே கூறலாம். ‘சத்துணவுத் திட்டம்’ நாடு மக்கள் வாழ்வுக்குப் பொறுப்பேற்கிறது. என்ற கோட்பாட்டை ஏற்கிறது என்பது பொருளாகிறது. இங்கிலாந்து தேசத்தில் குழந்தைகளுக்குத் தரும் மானியத் தொகையும், வளர்ந்தவர்களுக்குத் தரும் வாழ்க்கைத் தொகையும் கண்ட பிறகு