உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஒருவன் எடுக்கிறான்; எடுப்பதற்கு முன் தன் தலைமைப் பீடம் என்ன சொல்லுமோ என்று அஞ்சி அஞ்சிப் பின் மேலிடத்துக் கட்டளை வந்த பிறகு எடுக்கிறான்; சீனாக்காரன் முதலில் அதை காமிராவில் போட்டோ எடுக்கிறான்; அதாவது சீனப் பயணிகள் எதற்கெடுத்தாலும் எதைக் கண்டாலும் உடனே போட்டோ எடுக்கிறார்கள் என்பது அந்தச் சித்திரத்தின் கேலித் தன்மை. அமெரிக்கன் ஒருவன் வருகிறான். அந்தப் பத்துப் பவுண்டை எடுப்பதற்கு முன் அதே இடத்தில் தன்னுடைய பத்து பவுண்டைக் கீழே போட்டுப் பின் இரண்டையும் சேர எடுத்துச் செல்கிறான். அமெரிக்கர்கள் பணம் போட்டுப் பணம் எடுக்கும் மனப்பான்மை உடையவர்கள்; தைரியமாக முதலீடு செய்து பின் தக்க வருவாய் ஈட்டுவார்கள் என்பது அதன் கருத்து. அது உண்மைதான். மிகப் பெரிய நகரங்களில் அடுக்குக் கட்டிடங்கள், வசதி மிக்க உணவு அகங்களைக் கட்டியிருக்கிறார்கள், மற்ற இடங்களை நோக்கக் கட்டணம் குறைவு; வசதி மிகுதி; எப்பொழுதும் பயணிகள் நிறைவு; நல்ல வருவாய்!

பிரெஞ்சுக்காரன் வருகிறான் யோசனையே செய்யவில்லை; பணத்தை எடுத்துக் கொள்கிறான்; அதைக் கொண்டு ஒரு புட்டியையும் துணைக்கு ஒரு குட்டியையும் கைப்பிடித்துக் கொண்டு போகிறான். பணம் கிடைத்தால் அனுபவிக்கத் தெரிந்தவன் என்பது அந்தக் கேலிச் சித்திரத்தின் கருத்து.

‘இந்தியா’ என்ற குரல் கீழே எங்களிடமிருந்து எழுப் பப்பட்டது. அதைப் பற்றி அவர்கள் அந்த நாடகத்தில் சிந்திக்கவில்லை. நாமே அதைப்பற்றிச் சிந்தித்துக்கொள்ள வேண்டியது. என்னைக் கேட்டால் அவன் அதைப் பத்திரப்படுத்திச் சேர்த்து வைப்பான். காரணம் அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மிகுதி என்றுதான்