பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

257


இளையாரும், ஏதிலவரும் உளைய, யான் உற்றது உசாவும் துணை. என்று யான் பாடக் கேட்டு, அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்துன்பத்தில் துணையாய மடல் இனி இவள் பெற இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள்- அன்புற்று, அடங்கு அருந் தோற்றத்து அருந் தவம் முயன்றோர் தம் உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.

& - கவி 138 'தலைவி மின்னின் நுடக்கமும் கனவின் தோற்றமும் போன்ற தன் வடிவைக் காட்டினாள் என்னுடன் முற்படக் கூடினாள் பிறர் என்னை இகழ்ந்து சிரிப்பனவற்றையும் எனக்குக் காட்டினாள் என் நெஞ்சம் என்னுடன் கூடி நில்லாமல் அழகிய மருப்பையும் அழகையும் கொண்ட யானை மதத்தால் பாகனுக்குச் செய்யும் தொழில்களைத் தவிர்த்து வேண்டியபடியே நடக்காதபடி தன்னை விலக்கும் தோட்டியையும் கை கடந்தது போன்று, தன் மீது ஏற்பட்ட வேட்கையால் என் ஏவலைச் செய்தலை விட்டு வேண்டிய வண்ணம் நடக்காதபடி தனக்குக் காவலான அறிவும், நம் அறிவாய் ஆராய்ந்த அடக்கமும் இயல்பான நாணத்துடனே பொருந்தி என் நெஞ்சைக் கைக் கொண்டாள் தன் நலத்தை நான் காணாமல் மறைத்தாள், அவளைக் கூடும் வழி எது என்று ஆராய்ந்து இனி மடல் ஏறுதலே அவளைக் கூடும் வழி என்று எண்ணினேன் (நான் ஏறும்) மடல் குதிரையில் சூட்ட வேண்டி நூலால் நீலமணி போன்ற நிறம் கொண்ட மயிற் பீலியையும் பூளைப் பூவையும் ஆவிரம் பூவையும் எருக்கம் பூவுடன் சேர்த்துத் தொடுத்து அம் மடல் மாவில் கட்டி வளமையுடைய ஊரின் தெருவில் இவன் இவளை (தலைவியை)ப்பாடும்; இதனை எல்லாரும் கேட்பீர்! என்று கூறிப் பாடத் தொடங்கினேன்.

“விளங்கும் அணியையுடைய என்னால் விரும்பப்பட்ட வள் எனக்குக் காதலித்தத் தந்தவை வருத்தமும் வருத்தத்தால் உண்டான பனைமரம் ஈன்ற மடலால் செய்த குதிரையும்

ஆகும்