பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஆத்மாவின் ராகங்கள்

மதுரம் கண்களில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்தாள் - இருளில் மின்னல் அழுது கொண்டு நிற்பது போல.

'இந்தப் பாதங்களைக் கைகளால் பிடிக்க உனக்கு என்ன யோக்கியதை '

'முதல் முதலாக இந்தப் பாதங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் புஷ்பங்களை அர்ச்சித்தவள் நான்தான்...'

'இருக்கலாம். ஆனால்- ஜமீன்தார்களைத் திருப்திப் படுத்துகிறவர்களை நான் பார்க்கவே வெட்கப்படுகிறேன்...'

'என்னுடைய கைகளால் நான் இத்தப் பாதங்களைப் பற்ற முடியாமல் போகலாம். ஆனால், மனத்தினால் இடைவிடாமல் நான் இந்தப் பாதங்களைப் பற்றுவதை நீங்கள் தடுக்க முடியாது...'

-இருளில் அவளுடைய விசும்பல் ஒலி ஒரு தேவதை மிகவும் சோகமான ராகத்தை முணுமுணுப்பதுபோல் இருந்தது. சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்த பின் மெளனமாக அந்தப் புடவைப் பொட்டலத்தை எடுத்து அவள் பக்கமாக நகர்த்தினான் அவன்.

கைகளால் அதை அவன் கொடுக்காமல் தரையில் நகர்த்தியது அவள் மனத்திற்கு வருத்தத்தை அளித்தது. தான் கொடுத்திருந்த மெத்தை, தலையணைகளை உபயோகப் படுத்தாமல், அவன் தரையில் பாயை விரித்துப் படுத்திருப்பதையும் அவள் கவனித்தாள். -

'என் மேல் கோபப்படுங்கோ வேண்டாம்னு சொல்லலை! ஆனா, அதுக்காக வெறுந் தரையிலே படுத்துக்காதீங்க...'

அவன் பதில் சொல்லாமல் இருக்கவே, அவள் மெத்தையை எடுத்துப் பாயின் மேல் விரித்தாள். தலையணைகளையும் நேரே எடுத்துப் போட்டுவிட்டு ஒதுங்கி நின்றாள்.