இளமையின் கினைவுகள் | 6 | பொடி போடுதல் முதலியவற்றில் பழகி நான் வேறு வகையில் மாறி இருக்கவும் கூடும். அவர் தம் எச்சரிக்கையும், அதன் வழி உண்டான அம்மாவின் கட்டுப்பாடும் என்னை ஓரளவில் மனிதனாக்கின என்னலாம், ஆகவே இன்றும் அந்தப் பெரிய வருக்கு ஒரு வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். 8. சர்க்கரைப் பொங்கல் அந்த இளம் வயதில் என் தாயார் எவ்வளவு கட்டுப் பாடுகள் செய்து வைத்திருந்தபோதிலும் நான் மற்றப் பிள்ளைகளோடு விளையாடுவதையே விரும்பினேன். அப் பிள்ளைகளுள் எனக்குப் பிடித்தமானவர் இரண்டொருவர் இருந்தனர். அவர்களோடு மாலை வேளைகளில் ஆற்றங்கரை யிலும் ஆற்று மணலிலும் விளையாடுவது வழக்கம் ஒரு நாள் மாலை நானும் என் நண்பரும் அவ்வாறு விளையாடுவதற்கு ஆற்றங்கரைக்குச் சென்றோம். மாலை ஐந்து மணி இருக்கும். கோயில் பூசை தொடங்க நாழி இருந்தது. நாங்கள் கோயிலுக்கு அருகில் சென்று பக்கத்து மணலில் உட் கார்ந்தோம். கோயில் உள்ளே நான்கைந்து பேர் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அந்நேர வேளையில் பேச்சுக் கேட்கவே நானும் என் நண்பரும் கூட அங்கு என்ன நடக்கிறது என்ற விருப்பினால் உள்ளே காணச் சென்றோம். முன் மண்டபத்திலே அப்போது தருமகர்த்தா? வாக இருந்த ஒரு பெரியவரும் அவருக்குத் துணையாட்கள் என்று பேசிக் கொள்கின்ற மற்ற இருவரும் உட்கார்ந்திருந் தார்கள். கோயிலில் பூசை செய்யும் ஐயர் இரண்டு தட்டு களில் சூடாக எதையோ கொண்டு வந்து வைத்தார். அவர் வைத்த வேளையும், நாங்கள் உள்ளே சென்ற வேளையும் ஒன்றாக இருந்தன. எங்களைக் கண்ட தருமகர்த்தாவுக்குக் கோபம் உண்டாயிற்று. 'சனியன்கள் எங்கிருந்து வந்து
பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/63
Appearance