பக்கம்:அமிர்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறைபட்டவகைத் தெரியவில்லை. அல்லது தெரிந்து கொண்டுதான் ‘அதுவே’ தன் தலை எழுத்து’ என்று மனதைச் சமாதானம் செய்துகொண்டுவிட்டானே என்றெல்லாம் எண்ணினுள்..

புவன வாய் திறந்து பேசமுடியாது. அதற்கு வட்டியும் முதலுமாக அவள் விழிகள் பேசுமே! குறு. நகையை ஒளித்துவைக்கும் சிமிழ் உதடுகள் ஆயிரம் இன்பக் கதைகள் பேசுமே! சுந்தரேசன் இம்மாதிரி அந்தப் புதுத் தம்பதிகளேப்பற்றி என்னவெல்லாமோ சிந்தித்தான்.

அன்று, ‘லீவ்’ முடிந்து சுந்தரேசன் ஊருக்குப் புறப்படுவதற்காகப் பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்த்த அறையில் பாட்டுச் சத்தம் தெளிவாகக் கேட்டது. மீனுவின் குரல் அல்ல என்பதை அனுமானித்த அவன் கூர்ந்து கவனித்தான். ஒருகணம் அவனுக்குப் பூமியும் ஆகாயமும் ஒன்றாகச் சுழல்வது போலத் தோன்றியது. யார் பாடுவது? புவன வல்லவா? அப்படியென்றால் அவள் ஊமையில்லையா? மீனு முன்பு சொன்னது பொய்யா? அல்லது ஆலவாய்ப் பெருமான் இப்போதுதான் அவள் பெற்றாேது பிசார்த் தனேக்கு மனமிரங்கி அருள் சுரந்திருக்கிருளோ?

மீண்டும் ஒருமுறை நோக்கினன். மீனு தன்னையே வெறித்துப் பார்த்துவிட்டு நகர்த்துவிட்டதையும் கண்டு கொண்டான். செப்பிடுவித்தை பார்ப்பது போலவே அவனுக்குப் பட்டது. - ஆச்சர்யத்தில் மூழ்கி உட்கார்ந்திருந்த சுந்தரேசனிடம் ஒரு வாண்டுப்பயல் ஓடிவந்து ஒரு கடிதத்தை நீட்டியதும்தான் அவனுக்குச் சுயஉணர்வு வந்தது. அது மீனு எழுதிய கடிதம்: அன்பரே,

முதலில் என்னே மன்னித்துவிடுங்கள். எதிரும் புதிருமாக நின்று தங்களிடம் மன்னிப்பைப் பெறவேண்டியதான், இப்படிக் கடிதம் மூலம் மன்னிப்புக் கோருவதைத் தவறக எண்ணமாட்டீர்களே ! 
சிறிது நேரத்துக்கு முன்பு புவனு பாடியதைக் கேட்டு தங்கள் முகத்தில் ஏற்பட்ட கலவரத்தைக் கண்டமாத்திரத்திலே அன்று நான் செய்த தவறை——
27
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/29&oldid=1195409" இலிருந்து மீள்விக்கப்பட்டது