உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மஜோதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆத்மஜோதி

331

3. தவத்திரு. தர்மபுர ஆதீனகர்த்தா அளித்த “செந்தமிழ்ச் செல்வர்“

4. தவத்திரு. மதரை திருஞானசம்பந்த மடாதிபதி அளித்த “திருநெறித் தவமணி“

5. தமிழக மாநிலத் தமிழ்ச் சங்கம் அளித்த “தமிழ்ப் பெரும் புலவர்“

முதலிய பட்டங்கள் குறிப்பிடத்தக்கன. தவிர, சென்னை பல்கலைக் கழகத்தின் “வித்வான்“, “எம். ஏ.“ ஆகிய பட்டங்களையும் பெற்றவர் திரு. கி. வா. ஜ.

இன்று தமிழகத்தின் சிறந்த இலக்கிய — சமயச் சொற்பொழிவாளர்களில் திரு. கி. வா. ஜ. அவர்களும் ஒருவர். குருநாதருக்கு வணக்கம் செலுத்தி விட்டுத் தமது சொற்பொழிவை திரு. கி. வா. ஜ. துவக்க ஆரம்பித்தவுடனே குழுமியிருக்கும் மக்கள் மெய்மறந்து போவார்கள். திரு. கி. வா. ஜ. அவர்கள் சென்று சொற்பொழிவாற்றாத ஊர்களே தமிழகத்தில் இல்லையென்று சொல்லிவிடலாம். வடநாட்டின் பகுதிகளில் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ, எங்கெங்கெல்லாம் தமிழ்ச் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள் பணி ஆற்றுகின்றனவோ அங்கெல்லாம் சென்று தமது பரந்த அறிவை, மேதையை மக்களுக்குப் பயன் படுத்தி வருகிறார் திரு. கி. வா. ஜ. ஏன், கடல் கடந்து பர்மா, இலங்கை முதலிய நாடுகளுக்கும் தமிழ் நாட்டின் இலக்கியத் தூதராகச் சென்று அங்குள்ள தமிழ் மக்களுக்கு தமது சொற்பொழிவுகளின் மூலம் இன்பம் கூட்டி வைத்த பெருமையும் திரு. கி. வா. ஜ. அவர்கட்கு உண்டு.

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் பெருமன்றத்தின் துணைத் தலைவர்; தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர், சாகித்ய அகதமி குழு, தமிழ் இலக்கிய மொழி வளர்ச்சிக் கழகக் குழு இப்படி பல இலக்கிய அமைப்புகளில் அங்கம் வகிக்கிறார் திரு. கி. வா. ஜ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/13&oldid=1544436" இலிருந்து மீள்விக்கப்பட்டது