330
ஆத்மஜோதி
1935 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தின் 'வித்வான்' தேர்வில் மாநிலத்தில் முதல்மையாகத் தேர்வு பெற்று, ரூ. 1000/- பரிசு பெற்ற திரு. ஜகந்நாதன் 1933 முதல் 35 வரை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பகுதியில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு 'தமிழ்க் காவியங்கள்’ என்ற ஆராய்ச்சி நூலை உருவாக்கினார். இந்த நூலின் முதல் பதிப்பு சென்னை பல்கலைக் கழகத்தின் ஆதரவில் முதன் முறையாக வெளியிடப்பட்டது.
திரு. கி. வா. ஜ. அவர்கள் இலக்கியத் துறையில் தொடாத பொருள் இல்லை - தொட்டதெல்லாம் தங்கம். சங்க இலக்கியக் காட்சிகள், சைவ திருமுறை, கந்தரலங்கார விரிவுரை, நாட்டுப் பாடல்களின் நயம், தமிழ் இலக்கியச் செல்வங்களை புதிய முறையில் அறிமுகப்படுத்தும் கட்டுரைத் திரட்டு, இலக்கியம் வளர்ந்த கதை, தமிழ்க் காப்பியங்களின் சிறப்பு, புலவர்கள் கதைகள், மன்னர்களின் சரித்திரங்கள், இலக்கண விளக்கம், கவிதைத் தொகுதி, சிறுகதைத் தொகுதிகள், பத உரைகளைத் தன்னகத்தே கோண்ட திருக்குறள் உரை வளம் இப்படி இது வரை 120 நூல்களுக்குமேல் உருவாக்கித் தமிழ் கூறும் நல்லுலகுக்களித்துள்ளார் திரு. கி. வா. ஜ. இதுவ ரை இவருடைய சிறுகதைகள் 11 தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இவருடைய சிறுகதைத் தொகுதிகளான அறுந்த தந்தி’, 'பவழ மல்லிகை" ஆகிய இரண்டும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசைப் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. " .
கடந்த பல ஆண்டுகளாக திரு. ஜகந்நாதன் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டையும், சமயத் தொண்டையும் பாராட்டி அவர்களுக்கு அனேகவிருதுகளும், பட்டங்களும் அளிக்கப்பட்டுள்ளன. அவைகளில்:
1. தவத்திரு. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் அளித்த 'திருமுருகாற்றுப்படை அரசு" "வாகீச கலாநிதி"
2. தவத்திரு. சிருங்ககிரி சங்கராச்சாரிய சுவாமிகள் அளித்த "தமிழ் கவிபூஷணம்"