திருமுகச் செவ்வி 35
மகிழ்ருள். அடுத்த காட்சி: அவன் மரவுரி புனேந்து கொண்டு வந்து கிற்கிருன். 'கான் காட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்' என்கிருன். அவள் மனம்
மாழ்குகிருள்,
இந்த இரண்டு காட்சிகளையும் இப்போது மீட்டும் கினேவுக்குக் கொண்டுவருகிருள். உவகைச் செய்தியைச் சொன்னபோது அவன் முகம் தாமரையை ஒத்திருந்தது. காட்டுக்குப் போகும் செய்தியைச் சொன்னபோதும் அவள் அந்த முகத்தைப் பார்த்தாள். என்ன வியப்பு அதில் சிறிதும் வாட்டம் தோன்றவில்லை. அதே பொலிவோடு தாமரையை ஒத்த மலர்ச்சியோடு அத் திருமுகம் விளங் கியது. அதை இப்போது சினேக்கிருள்,
மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும் இத்தி ருத்துறக் தேகென்ற போதினும் சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை ஒத்தி ருந்த முகத்தினை உன்னுவாள். ' இரண்டு சமயங்களிலும் முகம் அலர்ந்த செங் தாமரையினை ஒத்திருந்தது. பகல், இரவு என்ற வேறுபாட்டால் மலர்தலும் கூம்புதலும் உடையது தாமரை. அப்படி இல்லாத தாமரை ஒன்றை உவமையாகக் கூற எண்ணினுள்; சித்திரத்துச் செந்தாமரையைக் கூறினுள். அதையன்றி. அலர்ந்த செந்தாமரை அவன் திருமுகத்துக்கு ஒப்பாக இருந்தது என்ற செய்தியில்
வேறுபாடில்லை.
கைகேயியின் சுடுசொல்லேக் கேட்பதற்கு முன்பும். கேட்டுத் தன்பால் வந்து செய்தி சொல்லிய சமய மாகிய பின்பும் இராமன் முகம், அலர்ந்த செந்தா அமரை ஒத்திருந்த தகைமையைச் சீதை உணர்ந்தாள்.
1. காட்சிப். 20,