விதியின் பிழை 179
வன்மனத்து அரக்கியைக் கொன்று மாமுனிவர் வாழச் செய்த வீரச் செயலே அவள் மறைத்துக் காட்டுகிருள். தாடகையின் திய செயல் இன்னதென்று சொல்லவில்லை; அவளே அரக்கி என்றும் கூறவில்லை; 'தாடகை எனும் பெயர்த் தையலாள்" என்கிருள்.
நேரான செய்தியைக் கூளுக்கி வளைத்து அவள் சொன்னலும், கைகேயி அவள் குறிப்பை உணரவில்லை. இராமன் முடிசூடப்போகிருன் என்ற செய்தி தெரிந்ததோ இல்லையோ அவளுக்கு உவகை பொங்கியது. உள்ளத்தில் உள்ள அன்பு இப்போது ஆர்த்தெழுந்தது மிகவும் பேரொளி வீசும் ஒரு மாலையை அவளுக்கு வழங்கிள்ை.
ஆயபே ரன்பெனும்
அளக்கர் ஆர்த்தெழத் தேய்விலா முகமதி
விளங்கித் தேசுறத் தூயவள் உவகைபோய்
மிகச்சு டர்க்கெலாம் நாயகம் அணையதோர்
மாலை கல்கிளுள்.
கைகேயி, உள்ளத்தால் தூயவள். அவள் உள்ளத்தில் பேரன்பெனும் கடல் கிடக்கிறது. இப்போது அது ஆலித்துப் பாயும் வண்ணம் மந்தரை ஒரு செய்தியைச் சொல்லிவிட்டாள். அதல்ை அந்த அன்பென்னும் கடல் ஆர்த்து எழுந்தது. அவள் முகமாகிய மதி பொலிவுபெற்றது அவளுக்கு உண்டான உவகை சொல்லி முடியாது.
இப்போதாவது கூனி தன் சூழ்ச்சியை மாற்றியிருக்க லாம். அவள் அவ்வாறு செய்யவில்லே. அவள் தன் சினத்
1. மந்த ைசூழ்ச்சிப் படலம், 52.