பால் பொருத்தக் கேடுகள் 461
யோனிக் குழலின் இழையங்கள் 5 நீண்டு விரியக் கூடியன வாக இருப்பதால் ஆணுறுப்பின் அளவுகளுக்கேற்றவாறு அவை பொருத்தப்பாடு அடைவது எளிது.
ஒரு சில இளைஞர்கள் தங்கள் ஆணுறுப்பு மிகச் சிறிய தாக உள்ளதென்று பயந்து சாகின்றனர்; அதனுல் தங்கள் திருமண உறவு பாதிக்கப்பெறலாம் என்றும் அஞ்சுகின்றனர்; ஒரு சிலரிடம் இந்த அச்சம் குமரப் பருவத்தைக் கடந்தும் செல்லுகின்றது; தங்களுடைய குறை வெளிப்பட்டுவிடும் என்று சிலர் திருமணத்தைப் புறக்கணிக்கவும் செய்கின் றனர்; இன்னும் சிலர் பாலுறவினையே மேற்கொள்ளாது அமைகின்றனர். மருத்துவ இலக்கியத்தில் கண்ட ஒர் எடுத் துக்காட்டினே ஈண்டுத் தருகின்றேன். நல்ல உடல்வளமும் மனவளமும் உள்ள இருபத்தேழு வயதுடைய ஒருபட்டதாரி தன்னுடைய ஆணுறுப்பு மிகச் சிறியதாகவுள்ளதென்று கருதினர். தன்னுடைய முன் குமரப் பருவம் முழுவதும் இந்தக் கற்பனைக் குறை'யினுல் தொல்லப்பட்டார். அவர் பிறர் தன்னை ஆடையில்லாத நிலையில் பார்க்க வாய்ப் பினேயே தருவதில்லை; பிறர் முன்னிலையில் அவர் தன் ஆடை யைக்கூட மாற்றிக்கொள்ளார். இவரை மருத்துவச் சோதனைக்குட்படுத்தியதில் அவருடைய ஆணுறுப்பு தொங் கிய நிலையிலும் விறைத்த நிலயிலும் சராசரி நிலக்கு மேல் இருந்தது தெரிந்தது. வேறு குறை ஒன்றுமே அவரிடம் காணப்பெறவில்லை. சாதாரணமாக இத்தகைய கவலைகட் குரிய காரணம் மிக ஆழமானதாகவே இருக்கும். பெரும் பாலும் பிள்ளேப்பருவ சமனக்கோட்டைகளைப் பற்றியோ இருக்கும். இளமையில் இவருடைய தந்தையார் இவரிடம் முட்டிமைதுனத்தை மேற்கொள்வோரிடம் ஆணுறுப்பு வளராது என்று சொல்லியிருந்தார். சில ஆண்டுகள் அவர் இப்பழக்கத்தில் ஈடுபட்டிருந்ததால், அவருக்கு இத் திகில் ஏற்பட்டு தன் உறுப்பு இருக்க வேண்டிய அளவுக்கு இரா
ാ
75. இழையங்கள்-Tissues 76. மனக்கோட்டை-Fantacy