374 அழியா அழகு
டாகும். இராமன் செய்த செயல் மந்தரையின் கூனேச் சுட்டிக் காட்டுவதுபோல இருந்தது. ஆதலின் அந்த உண்டை அவள் உடம்பில் மட்டும் படவில்லை; உள்ளத்திலும் பட்டது. உடம்பில் வலிக்கவில்லை; உள்ளத்தில் மிக மிக
வலித்தது.
இராமன் மந்தரையின்மேல் உண்டையை வீசாமல் இருந்திருக்கலாம்; அப்படி வீசிலுைம் அவள் தலையிலோ கையிலோ அடித்திருக்கலாம். கூன்மேல் அடித்தாலும் சிறு பிள்ளே விளையாட்டென்று அவளும் ஏனேயோரைப்போல் அதைப் பொருட்படுத்தாமல் போயிருக்கலாம். மூன்று கிலேயிலும் மூன்று வேறு போக்குகள் இருந்தன. ஆனல் விதி அந்தப் போக்கினின்றும் விகழ்ச்சிகளே மாற்றி இழுத்து வந்தது. அவன் கனியின் முதுகுக் கூனில் அடித்தான்; அவள் உள்ளத்தில் கனல் கொப்புளித்தது.
கூனி, கைகேயியின் அரண்மனைக்கு விரைவாகப் போகிருள்; தன் அரிய அறிவுரையைச் சொல்லுவதற்குத் தான்! இதை நிறுத்திவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்’ என்ற வெகுளியோடு வாயை மடித்துக் கொண்டு போகிருள். அந்த வெகுளித் தீக்குக் காரணமான நிகழ்ச்சி அவள் உள்ளத்தே கனலுகிறது.
தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல் மண்டினுள், வெகுளியின்
மடித்த வாயினுள்; பண்டைகாள் இராகவன்
பாணி வில்உமிழ் உண்டைஉண் டதனைத்தன்
உள்ளத் துள்ளுவாள். '
1. மந்தரை சூழ்ச்சிப் படலம், 41.