212 அழியா அழகு
கண்டனன். உரு நிறத்து ஒரு தனிக் கொண்டலும் ஊழி யானுமாகிய இராமனுடைய இரு நிறத்தில் உற்ற வேலை வாங்குவதற்கு இயைந்த காந்தமனியாகிய சீதையைக் கண்டான்.
வேற்கு என்ற பாடம் ஏட்டுச்சுவடிகளில் இருக் கிறதா?-இந்தக் கேள்வி எழுவது முறை. பழங்காலத்தில் எ, ஏ என்னும் இரண்டுக்கும் ஏட்டுச்சுவடிகளில் வேறுபாடு தோன்ருது, வெல், வேல் என்ற இரண்டையும் வெல் என்றே எழுதியிருப்பார்கள். மீட்சிப்படலத்தில் வரும் பாட்டிலுள்ள, "அயில்வேல்' என்ற தொடரும் எட்டுச் சுவடியில், "அயில்வெல்” என்றுதான் இருக்கும். படிக் கிறவர்கள் சக்தர்ப்பத்துக்கு ஏற்றபடி வெல்லா, வேலா என்பதை அறிந்து படிப்பார்கள், இங்கே "அயில்வேல்" என்று படித்தவர்கள் காட்சிப் படலத்தில் வெற். கியைந்த' என்று படித்து எழுதிப் பதிப்பித்து விட்டார்கள். ஆகையால் இது பாடபேதமே யன்று; ஏடு படித்தவர்களால் உண்டான பிழையே யாகும்.
கம்பனுக்கு, மார்பில் புதைந்த வேலைக் காந்தமணி கொண்டு எடுக்கும் வழக்கம் என்ருகத் தெரிந்திருக்கிறது. அதனை இரண்டு இடங்களில் வைத்திருக்கிருன். காட்சிப் படலத்தில் கவிஞன் கூற்றிலும், மீட்சிப் படலத்தில் தசரதன் கூற்றிலும் காந்தமாமணி சுடர்விடுகிறது. பிரிவுத் துன்பமாகிய வேலே வாங்கும் காந்த மாமணியாகச் சீதை தோன்றுகிருள், சுந்தரகாண்டத்தில், கைகேயியின் வரத்தி ளுல் பெற்ற துன்பமாகிய வேலே வாங்கும் காந்தமாமணி யாக விளங்குகிறது.இராமன் திருமார்பு. யுத்தகாண்டத்தில். இரண்டு பாடலேயும் பார்த்தால் வேலும் காந்தமா