பக்கம்:இல்லற நெறி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

இல்லற நெறி


போன்றே இந்த இயக்க அசைவுகளும் தாமாக ஏற்படக் கூடியவையாகும். ஒரு குறிப்பிட்ட உச்சநிலை உணர்ச்சியின் பொழுது இந்தநான்கு இயக்க அசைவுகளும் ஒரே காலத்தில் ஏற்படுகின்றன. அவை மிக வன்மையாக உள்ளனவாத வின், அவற்றைத் தெளிவாக உணரலாம். மேலும், இச்சமயத் தில் ஆணைப்போலவே பெண்ணும் பெருமூச்சு விடுகின்ருள். தனக்குள் சேசரித்து வைத்திருத்த அனைத்தும் வெளிப் பட்டன போன்ற உணர்ச்சியையும் பெறுகின்ருள்.

ஆணிடம் விந்துப் பாய்மம் வெளிப்படுவதைப்போலவே பெண்ணிடமும் யாதாவதுவெளிப்படுகின்றதா என்று நீ வின வலாம். கூறுவேன்; புணர்ச்சியால் பெண், பாலணுக்களை வெளிப்படுத்தியதாக இதுகாறும் அறிவியல் கண்டறிய வில்லை. யோனிக்குழலில் சுரக்கும் வழுக்கிடு பொருளைத் தவிர வேறு ஒன்றும் சுரப்பதாக அறுதியிடப் பெறவில்லை. உச்சநிலை உணர்ச்சியின்பொழுது கருப்பையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு திரவம் யோனிக்குழலில் வெளியேற்றப் பெறுகின்றது என்று ஒரு சிலர் கருதுகின்றனர். அங்ங்னம் வெளிப்படுவதாக இருப்பினும், அது விந்துப் பாய்மத்துடன் ஒப்பிடக்கூடியதன்று; அங்ங்ணம் நிகழ்வதை ஆணுே பெண் னே அறிந்ததாகத் தெரியவில்லை.

தம்பதிகளிடம் பாலின்ப அளவுகள்: உச்சநிலை உணர்ச்சி யின் பொழுது உள்ளக் கிளர்ச்சி உணர்ச்சிசளும் காதலு ணர்ச்சிகளும் தனிப்பட்டோரின் நடத்தையும் ஆணிடமும் பெண்ணிடமும் பல்வேறுவிதமான வேறுபாடுகளுடன் கூடி யவை. அவை பெரும்பாலும் அவர்களுடைய கூருணர்வை யும் உள்ளக் கிளர்ச்சித் துலங்களின் உறைப்பையும் பொறுத்தவை ஒரு சிலரிடம் பாலின்பம் சிறிதளவு இருக்க லாம்; மற்றையோரிடம் அஃது உடல், உள்ள மகிழ்ச்சியின் கொடுமுடியையும் எட்டலாம். இந்த இரண்டுவித எல்லைக் குட்பட்டவர்கள் எண்ணற்றவர்களாவர். தம்பதிகளின் உட் லமைப்பின் வேறுபாடுகளையும், அவர்களது மனப்பான்மை

78. *05&ta-Sensitivity,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/402&oldid=1285269" இலிருந்து மீள்விக்கப்பட்டது