பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ஆலேக் கரும்பு படிக்கிற ஆற்றல் கண்ணுடியில்ை உண்டாகும் என்று அந்த அசட்டு மனிதன் எண்ணின்ை! - படிக்காதவனுக்கு மூக்குக் கண்ணுடி புத்தகம் படிக்க உதவாது. கண்ணுடி போட்டுக்கொண்டால் எதையும் படிக்கலாம் என்று எண்ணுவதுபோலப் புத்தகங்களே வாங்கி வைத்துப் படித்தால் எல்லாம் தெரிந்துவிடும் என்று எண்ணுவதும் தவறு. அருட்பசி வேண்டும். இறைவன் அருளே உள்ளத்தே இருத்திப் படித்தால் அதற்கு முன் புலனுகாத பொருள் எல்லாம் விளங்கும். இருட்கண்ணி ளுேக்குஅங்கு இரவியும் தோன்ரு தெருட்கண்ணி ைேர்க்குள்ங்கும் - - - - சிர்ஒளி ஆமே. - என்கிருர் திருமூலர். நமக்கு எல்லாப் புலன்களும் இருந்துங்கூடச் செவ்வை யாக இல்லை. நம்முடைய மூக்கு மலரின் மனத்தை நன்கு உணர்வதில்லை. தாமரை மலரில் மென்மையான மணம் இருக்கிறது என்ருல் அது பலருக்கு வேடிக்கையாக இருக் கிறது. புகையும் புழுதியும் கப்பிக்கெர்ண்டமையால் கம் முடைய முக்கு மரத்துவிட்டது. கெடியாக இருந்தால் தெரிகிறது. ரோஜாப் பூவின் மணம் ஓரளவு தெரிகிறது. தாமரையின் நறுமணம் தெரிவதில்லை. நம்முடைய மூக்கில் உள்ள நரம்புகள் மென்மையை இழந்துவிட்டன வேயன்றித் தாமரை மீணத்தை இழந்துவிடவில்லை. சோலேயில் குயில் கூகூ என்று கூவுகிறது. அது காதில் விழுவதில்லை. விளம்பரத்துக்காகத் தெருவிலே ஒலி பெருக்கி வைத்து இரவும்பகலும் முழங்கும் முழக்கத்தையும் மோட்டாரின் ஓசையையும் வன்மையான ஒலிகளையும் கேட்டுக் கேட்டுக் காது ஜவ்வுகள் வன்மை அடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/64&oldid=744430" இலிருந்து மீள்விக்கப்பட்டது