பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 கொண்டார்கள். வயது வந்த பெண்களுக்குக் கவர்ச்சி உண்டாக்க அதுதான் வழிபோலும். பொங்கல் பண்டிகையின் போது பசுக்களுக்கும், எருதுகளுக்கும் கொம்புகளிலே பூசிய சாயங்கள் மெதுவாக மறைந்தன. அன்று வயிருற உண்டதையும் மக்கள் மறந்துவிட்டனர். சற்று பிற்பட்டு விளைந்த கெல்லையும் அறுவடை செய்து துாற்றியாகி விட்டது; புல் கிடைக்காத கோடை மாதங்களிலே தீனியாகப் போடுவதற்காக வைக் கோலப் போராகப் போட்டு வைத்திருக்தார்கள். புதிய கால்வாயிலிருந்து பாசனத்திற்காகக் கொஞ்சம் தண்ணீர் வந்தது; ஆணுல் எதிர்பார்த்த அளவு வரவில்லை. முன் போலவே ஆண்கள் கழனிகளிலே விடியற் காலையிலிருந்து இருட்டும்வரை வேலை செய்தனர்; முன்போலவே பெண்கள் மாட்டுச் சாணியைக் கூடைகளில் சேகரித்துத் தங்கள் வலது கை அடையாளம் பதியுமாறு வட்டமாக வரட்டி தட்டி உலருவதற்காக அவற்றைத் தங்கள் சுவர்களில் தட்டி வைத்தார்கள். சமையல் செய்ய அவற்றைப் பின் ஞல் விறகுபோலப் பயன்படுத்துவர். குடிசைத் தொழிலி லிருந்து கொஞ்சம் அதிகமான வருமானம் கிடைத்தது மெய்தான்; பஞ்சம் வந்தால் இப்பொழுது சீக்கிரத்திலே மக்களைக் கொல்ல முடியாது. சில பெண்கள் அதிகமாக வெள்ளி வளையல்கள் அணிக்திருந்தனர்; சில குடும்பங் களிலே துணிமணிகளும் ஒன்றிரண்டு பாத்திரங்களும் அல்லது விளக்குகளும் அதிகமாக இருந்தன. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் அவர்கள் பணக்காரர் களாக இருக்காவிட்டாலும், ஏழ்மை கொஞ்சம் குறைந்தா வது இருப்பார்கள் என்று எண்ண முடியுமா? சரஸ்வதிக்கு நோய் வந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த பலவிதமான மருந்துகளில் மீதியிருப்பனவற்றை