உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அபிராமி அந்தாதி

அதனைத் தரிசித்து அறிந்த என் கண்ணும் மனமும் ஆனந்த மேலீட்டால் மகிழ்கின்றவாறும், இவ்வாறெல்லாம் என்னைத் திருவருள் நாடகம் ஆட்டியவாறும் என்ன அதிசயம்!

ஆடகத் தாமரை அணங்கு: 5, 20, 58, 82.

80

அணங்கே அணங்குகள் நின்பரி
வாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகி
லேன்நெஞ்சில் வஞ்சகரோ
டிணங்கேன் எனதுன தென்றிருப்
பார்சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றி லேன்என்கண்
நீவைத்த பேரளியே.

(உரை) தேவி, தேவ மாதர் நின் பரிவார சக்திகளாக இருத்தலினால் உன்னையன்றி வேறு ஒருவரை நான் வணங்கேன்; வாழ்த்துதலும் செய்யேன்; நெஞ்சில் வஞ்சகத்தையுடைய மக்களோடு தொடர்பு பூணேன்; எனது. பொருளெல்லாம் நின்னதேயென்று எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்து நிச்சலனமாக இருக்கும் யோகியர் சிலர்; அவர், யாவரோடும் மாறுபடாமல் உறவு பூண்டிருப்பேன்; அறிவு சிறிதும் இலேனாயினும் என்பால் நீ வைத்த பெரிய கருணை இருந்தவாறு என்னே !

வேறொரு தெய்வப் பெண்ணைத் தொழலாம் எனின் யாவரும் நின் ஏவற் குழுவினராக இருத்தலின் நீயே யாவருக்கும் தலைவியாய் இருத்தலை அறிந்து அவரைத் தொழுதலை ஒழிந்து நின்னையே தொழுதேன் (49) எனது உனது என்றிருப்பார் : “எனக் குள்ளவெல்லாம், அன்றே யுனதென் றளித்து விட்டேன்" (95)

81