உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

71



பழிக்கே சுழன்றுவெம் பாவங்க
ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோடென்ன கூட்டினியே.

(உரை) அபிராமவல்லிக்குத் திருவிழியில் எமக்கு வழங்கும் திருவருள் இருக்கின்றது. அவ்வருளைப் பெறும் பொருட்டு வேதங்கள் கூறியுள்ள நன்னெறியின்படியே அவளை வழிபட்டுத் தியானிக்க எமக்கு அநுகூலமாகிய நெஞ்சம் இருக்கிறது. அந்த வேதநெறி இருக்கவும், பழிச் செயல்களிலே ஈடுபட்டுத் திரிந்து கொடிய பாவங்களையே செய்து பாழான நரகக்குழியில் அழுந்துகின்ற கீழ் மக்களோடு இனி என்ன சம்பந்தம் நமக்கு உண்டு?

விழிக்கு அருள் உண்டு: "அருள் விழி யொடும்வளர் கருணை” (மீனாட்சி. செங்கீரை. 8.) வேதஞ் சொன்னபடி வழிபடுதல்: "மறை சொல்லிய வண்ணந் தொழுமடி யாரை" (91) என்பர் பின்.

79

கூட்டிய வாஎன்னைத் தன்அடி
யாரில் கொடியவினை
ஓட்டிய வாஎன்கண் ஓடிய
வாதன்னை உள்ளவண்ணம்
காட்டிய வாகண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வாநடம் ஆடகத்
தாமரை ஆரணங்கே.

(உரை) பொற்றாமரையில் எழுந்தருளியிருக்கும் அரிய அழகியாகிய தேவி, ஒன்றுக்கும் பற்றாத என்னைத் தன் அடியாருள் ஒருவனாகச் சேர்த்தருளியவாறும், அங்ஙனம் சேர்த்துப் பின் என்பாலுள்ள கொடிய இருவினைகளையும் போக்கியவாறும், என்பால், அருள் புரிய ஓடி வந்தவாறும், தன் திருக்கோலத்தை உள்ளபடியே காட்டியவாறும்,

அபிராமி-7