பக்கம்:அறிவியல் விருந்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலும் இடியும் 57 விருக்கும் ஒரு சில மின்னணுக்கள் எளிதில் சுழலக்கூடியன வாக இருப்பதால் அவை ஓர் அணுவினின்றும் பிறிதோர் அணுவிற்குத் தாவிச் செல்லுகின்றன. ஒரு தாமிரக் கம்பியை ஒரு மின்கலத்துடன் ஒரு குறிப்பிட்ட முறையில் இணைத்தால் இங்கனம் எளிதில் சுழன்று செல்லக்கூடிய மின்னணுக்கள் ஒரே திசையில் தள்ளப்பெறுகின்றன. இதையே நாம் மின்னோட்டம் என்கின்றோம். ஒரு பொருளின் சில அணுக்கள் தாம் சாதாரணமாகக் கொண்டிருக்கவேண்டியதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மின்னணுக்களைப் பெற்றிருப்பின், நாம் அப்பொருள் மின்னூட்டத்தைக் கொண்டிருப்பதாகக் கூறு கின்றோம். மிக அதிகமான மின்னணுக்கள் உள்ள பொழுது மின்னூட்டம் எதிர் மின்னூட்டமாகவும், தேவை யான அளவு அவை இல்லாத பொழுது நேர்மின்னூட்ட மாகவும் இருக்கும். ஈண்டு எதிர் மின்னுரட்டம், நேர் மின்னூட்டம்’ என்ற சொற்கள் விநோதமாக இருக்கலாம். அதிகமாக மின்னூட்டம் இருப்பதை 'நேர் மின்னூட்டம்’ என்றும், மிகக் குறைவான மின்னூட்டம் இருப்பதை எதிர் மின்னூட்டம்’ என்றுமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுவது இயல்பன்றோ? ஆனால், சண்டு அந்த முறை மாறியுள்ளது. நாம் இன்று மின்சாரத்தைப் பற்றி அறிந்திருப்பதுபோல் மக்கள் அதனைப் பற்றி அறியா திருந்த காலத்தில் இப்பெயர்கள் அவற்றிற்குத் தரப் பெற்றதால் நேர்ந்த நிலை இது. எதிர்மின்னூட்டமுள்ள பொருள் ஒன்று நேர்மின் னுாட்டமுள்ள பொருளொன்றினைத் தொடுங்கால், மின் ணுைக்கள் ஒன்றினின்றும் பிறிதொன்றிற்குப் பாய்ந்து இரண்டிலும் அவற்றின் நிலை சமமாகின்றது. உண்மை யில், மின்னூட்டங்கன் மிக அதிகமாக உன்னபொழுது நாம் பொருள்களைத் தொடுமாறு செய்ய வேண்டிய