பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱沙 அறிவியல் பயிற்றும் முறை مہ۔م۔ -------------- --بی.۔اسدہ مسے۔ அப்பெயர்களாகப் பிரித்தறியப்படா. அடிப்படையாகவுள்ள ஒரு சில செய்திகள் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்று அவை ஒரு திட்டத்தில் அமைக்கப்பெற்றுப் பொதுவாகவே கற்பிக்கப் பெறும். 1. வாழும் சமூகத் தேவைக்கேற்ற செய்திகள் : அறிவியல் பாடத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பெறும் பொருள்கள் மாளுக்கர்கள் வாழும் சமூகத் தேவைக்கேற்றவையாகவும் அமைதல் வேண்டும். இன்று நாட்டுப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களில் வந்து உயர்நிலைக் கல்விபெறும் இளைஞர்கள் தம் கல்வி முடிவுற்ற பிறகு பிழைக்கும் நிமித்தம் காட்டுப்புறங்களைத் துறந்து நகர்ப்புறத்தையே நாடு கின்றனர். கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழியைக் கடைப் பிடிப்பவர்கள் அவர்கள் ! இதல்ை வரவர நாட்டுப்புற வாழ்வு கேடுறு கின்றது : கூடிவாழ்ந்த குடும்பங்கள் சிதறிப் போகின்றன. அன்றியும், இவ்வாறு கல்வி பயின்றவர்கள் காட்டுப்புற வாழ்வையே வெறுத் தொதுக்குகின்றனர். நாட்டுப்புறப் பிரச்சினேகளே அலட்சியம் செய்து இகழ்கின்றனர். தாம் பெற்ற கல்வியாலும் பயிற்சியாலும் பழைய நிலையிலேயே உள்ள தம் சமூகத்தை உயர்த்தலாம் என்பதுபற்றி அவர்கள் சிறிதும் சிந்திக்காது பட்டணங்களிலே சென்று வாழவே விரும்புகின்றனர். அவர்கள் பெறும் கல்வியில் தக்கதோர் சூழ்நிலையை உண்டாக்கி, நன்முறையில் அமைந்துள்ள பாடத்திட்டத்தைப் பயிற்றுவோமேயானல் அவர்கள், தாம் பிறந்து வளர்ந்த சமூகத்திற்கே திரும்பச் சென்று வாழ வேண்டும் என்ற மனப்பான்மையைப் பெறுதல் கூடும் : அரசினர் அலுவலகங்களிலோ பிற இடங்களிலோ பெறும் நகர வாழ்க்கைக்குப் போதாத வருவாயுடன் நரக வாழ்க்கை"யாக வாழ்வதை வெறுத்தொதுக்கி அதிலும் குறைந்த வருவாயாக இருப்பினும் மன கிறைவுடன் அமர வாழ்வு வாழ விரும்புதல் கூடும். - இத்தகைய கேடான கிலேக்குப் பல்வேறு காரணங்கள் உள. இக் காலம் உலகாயதம் தலைவிரித்தாடும் காலம் ; உண்டு உடுத்து இனம் பெருக்கி வாழ்வதே வாழ்வு என்று மயங்கித் திரியும் கிலே தலைதுாக்கி இருக்கும் காலம். அன்றியும், வாழ்வுக்குச் சிறிதும் பொருந்தாத கல்வி முறை, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல இங்கிலேயைப் பின்னும் கேடாக்கிவிட்டது. ஒரு குறிப்பிட்ட முறையில் கல்வி பெற்ற ஒரு சமூகத்தினர் அதே முறையில்தான் தம் குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்று விழைகின்றனர். கல்வி முறையை மாற்றியமைத்தால் பெரும்பயன் விளக்கும் என்பதில் அவர்கள் சிறிதும் நம்பிக்கை கொள்வதே இல்லை. கற்பிக்கும் ஆசிரியர்களும் இங்கிலேயைப் பின்னும் அரண் செய்கின்றனர் ; சென்ற காலத்தில் அடைந்த தவறுகளேயே வழிவழி கொண்டு செலுத்துகின்றனர். முறையை மாற்றிவிட்டால் அது தம் வாழ்க்கைக்கு உலைவைப்பதாய் அமைந்து விடுமோ என்று