பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வகம்-iiாதுகாப்பும் முதலுதவியும் 123 சிலர் சோதனைச்சாலையிலுள்ள வினைப்படுத்துப் பொருள்களே (Reagents) முதலுதவிக்குப் பயன்படுத்துகின்றனர் : இஃது அறவே கூடாது. முதலுதவியில் கையாளும் வேதியியற் பொருள்கள் மிகவும் தூய்மையாக இருத்தல் வேண்டும். முதலுதவிப் பெட்டியிலுள்ள பொருள்களே மட்டிலுந்தான் முதலுதவிக்குப் பயன்படுத்துதல் வேண்டும். எனவே, எளிதில் கிட்டும் இடத்தில் தேவையான பொருள்களடங்கிய முதலுதவிப் பெட்டியை வைத்திருத்தல் சாலப் பயன்தரும். விபத்துகள் நேரிடுங்கால் சமாளிக்க உதவும் விதிகள் : அடியிற் கண்டவற்றை விபத்துகள் ஏற்படுங்கால் அவற்றைச் சமாளிப்பதற்கு உதவும் விதிகளாகக் கொள்ளலாம் : (1) மிக விரைவில் சரியான சிகிச்சை தந்துவிடுதல் வேண்டும். (2) மருத்துவ உதவி தேவையில்லை என்று உறுதிப்படுத்தாத வரை, அவ்வுதவியை உடனே நாடத்தான் வேண்டும். சில சமயங்களில் மருத்துவரின் உதவி வேண்டியிருக்கும் : அல்லது ஆம்புலன்சின் உதவி தேவைப்படும். பல சந்தர்ப் பங்களில் முதலுதவி அளிக்கப்பெற்ற நோயாளியை மருத்துவரிடமோ மருத்துவ சாலேக்கோ அனுப்பி மேற் சோதனே செய்ய வசதி செய்தல் இன்றியமையாதது. (3) காயத்திற்குச் சிகிச்சை அளிப்பதற்குமுன் தூய்மையை முதலில் கவனித்தல் வேண்டும். காயத்துடன் சேர்க்கும் ஒவ்வொரு பொருளும் அன்டி செப்டிக்காக இருத்தல் வேண்டும். முதலுதவி அளிப்பவரின் கைகளே அன்டி செப்டிக் மருந்துகளைக் கலந்த நீரால் தூய்மையாக்கிக் கொண்ட பிறகுதான் உதவி அளிக்கத் தொடங்குதல் வேணடும். (4) ஏதாவது கடுமையான விபத்து நேரிடுங்காலும் பிற சமயங்களிலும் அதிர்ச்சியால் அபாயமும் உண்டாகலாம். அவ்வாறு நேரிடாது பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். தளர்ந்த காடித்துடிப்பு, வெளுத்த தோற்றம், உணர்ச்சியற்ற சோர்வுநிலை - ஆகியவை அதிர்ச்சியின் குறிகளாகும். சில சமயம் கொட்டாவி விடுதலையும் நடுக்கத்தையும் கூடக் காணலாம். கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டவர்கள் சில சமயம் உயிரிழக்கவும் நேரிடலாம். இனி, தற்செயலாக நேரிடும் விபத்துகளேச் சமாளிக்கும் வழிகளே ஒவ்வொன்ருகச் சிறிது கவனிப்போம் : - தணற் புண்களும் அழற் புண்களும் : நேரடியாக நெருப்பு, சூடான இரும்பு, மின்சாரம் முதலியவற்ருல் நேரிடும் புண்களேத் தணற்புண்கள் என்றும், நீராவி, கொதிநீர், அடர் அமிலம், எரிகாரம் முதலியவற்ருல்